தோசை பைத்தியமாக மாறிய கீர்த்தி சுரேஷ்…. சைடிஷ் கேட்டாக ஷாக் ஆகிடுவீங்க!

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்திருக்கிறார் .

கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ரகு தாத்தா இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்து மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டது.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

படம் பெரிதாக ஓடவில்லை விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. வசூல் ரீதியாக பின்தங்கி விட்டது .

இதனால் கீர்த்தி சுரேஷ் மிகவும் எதிர்பார்த்த ரகு தாத்தா திரைப்படத்தின் தோல்வி அவரை மிகுந்த வேதனைக்கு உள்ளாகிவிட்டது .

அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று கவனத்தில் இருந்து வருகிறாராம் .

தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது .

தெறி படத்தின் ரீமேக் ஆக உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமந்தாவின் கேரக்டரில் நடிக்கிறார்.

ரகு தாத்தா படம் தோல்வி:

முன்னதாக கடந்த சில நாட்களாக ரகு தாத்தா திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார் .

அப்போது பல விஷயங்கள் குறித்து பேசினார். அந்த வகையில் ஒரு பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்தமான தென்னிந்திய உணவு குறித்து பேசி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் .

இந்த விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எனக்கு பிடித்தமான தென்னிந்திய உணவு என்றால் அது தோசை தான் .

நான் எப்போதுமே தோசையை விரும்பி சாப்பிடுவேன் எனக் கூறிய கீர்த்தி சுரேஷ் அதற்கு அவர் சொன்ன சைடிஷ் தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் .

தோசை பைத்தியம் கீர்த்தி சுரேஷ்:

இருந்தாலும் அவருக்கு கேரளாவின் பிரத்தேகமான உணவுகளில் ஒன்றான புட்டு போன்ற எந்த ஐட்டமும் கீர்த்தி சுரேஷுக்கு பிடிக்காதாம்.

அதற்கு மாறாக அவருக்கு தோசை மட்டும் தான் மிகவும் பிடிக்கும் என கூறி இருக்கிறார். தோசைக்கு சாம்பார், சட்னி எதுவாக இருந்தாலும் அது செட் ஆகும் குறிப்பாக எதுவாக இருந்தாலும் நான் சாப்பிட்டு வருவேன்.

தோசை என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் தோசைக்கு வத்த குழம்பு அவ்வளவு ஏன் யோசிக்க ரசத்தை கூட சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவேன்.

அது மிகவும் ருசியாக இருக்கும் என கூறி இருக்கிறார் இதை கேட்ட ஆங்கர் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி விட்டார் .

என்னது தோசைக்கு ரசமா என ஷாக் ஆகும் அளவிற்கு ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். இதை அடுத்து சாமி படத்தில் வரும் சியான் விக்ரம் போல ரசத்தை சைட் டிஷ் ஆக்கி கீர்த்தி சுரேஷ் சாப்பிடுவாரா ?என கேள்வி எழுப்பி கடுப்பாக்கி விட்டார் கீர்த்தி சுரேஷ்.

தோசைக்கு சைடிஷ் ரசம்….

உடனே தன்னை இப்படி எல்லாம் கலாய்க்க கூடாது எனவும் அந்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசியதால் இந்த பேட்டி தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுரேஷின் டேஸ்டை பலர் கலாய்த்து விடுகிறார்கள். இருந்தாலும் சிலர் தோசைக்கு நிச்சயம் ரசம் சுவையாக தான் இருக்கும். கீர்த்தி சுரேஷ் சொல்வது சரிதான் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க எனக் கூறியும் வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா படத்தின் தோல்விக்கு பிறகு தமிழில் ஜெயம் ரவியுடன் சைரன் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்து வருகிறார்.

அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா , கன்னிவெடி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது .இந்த படங்களில் வெற்றிக்காக கீர்த்தி சுரேஷ் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version