கீர்த்தி சுரேஷ் திருமணம்..! 13 வருட காதல்.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் தியாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் பாம்பு சட்டை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால், அதன்பிறகு நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்த இரண்டாவது திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படம் முதலில் வெளியானது.

ரஜினிமுருகன் கொடுத்த ஓப்பனிங்

இந்த இரண்டு திரைப்படங்களுமே கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன் திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய ஓப்பனிங் பெற்று கொடுத்தது.

பெருவாரியான இளசுகளின் கனவு கன்னியாக மாறினார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார் விஜய் விக்ரம் சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சுரேஷ் தெலுங்கிலும் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

அவ்வப்போது இவருடைய திருமணம் குறித்த தகவல்கள் வெளியாவதும் அதனை கீர்த்தி சுரேஷ் மறுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இவர் எவ்வளவு தான் மறுத்தாலும் கூட மூன்று மாதத்திற்கு ஒருமுறை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கின்றன.

கீர்த்தியின் 13 வருஷ காதல்

அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கக்கூடிய தகவல் என்னவென்றால் நடிகை கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக காதலித்து வரும் தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் தான்.

கேரளாவில் பல்வேறு நகைக்கடைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் அவருடைய மகனைத் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தன்னுடைய கல்லூரி கால நண்பனான இவரை நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடமே கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உச்சத்தில் மார்க்கெட்..

கீர்த்தி சுரேஷ் இன் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது அவருடைய திருமணம் குறித்து தகவல் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. பொதுவாக நடிகைகள் தங்களுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எனினும் கீர்த்தி சுரேஷ் இந்த திருமண தகவல் குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version