ஒழுங்கா போயிரு.. அதான் உனக்கு நல்லது.. கீர்த்தி சுரேஷ்’ஐ பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

சமீப காலமாக சாதி ஒழிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு சார்ந்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் என்ன விஷயத்தை பேச போகிறது என்பதை ட்ரைலரிலேயே காட்டி விட்டார்கள்.

இந்த ட்ரெய்லரில் இடம் பெற்ற ஒரு காட்சி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியிருக்கிறது. என்சிசி மாணவியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பரேடின் நடுவில் தமிழ்ல சொல்லுங்க சார் எனக்கு எதுவுமே புரியல என்று கூறுவார்.

பொதுவாக என்சிசி சேரும் பொழுது என்ன கமெண்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் தெளிவாக தமிழில் விளக்கம் கொடுத்துவிட்ட பிறகு தான் சீருடையே கொடுப்பார்கள்.

ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷ் என்சிசி சீருடை அணிந்து கொண்டு பரேடிலும் பங்கேற்று விட்டு இடையில் எனக்கு ஹிந்தி தெரியாது தமிழில் கமாண்ட் பண்ணுங்க என்று காமெடி பண்ணிக் கொண்டிருப்பார்.

இதே போல தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் யாராவது எல்லையில் நின்று கொண்டு ஒண்ணுமே புரியல தமிழில் கமாண்ட் பண்ணுங்க என்று திருதிருவென விழித்துக்கொண்டிருந்தால் நாட்டின் நிலைமை என்ன ஆகும்..?

ஆனால், இந்த காமெடி காட்சியை ஏதோ பெரிய புரட்சி போல ஒரு சில இணையவாசிகள் சிலாகித்து கொண்டாடிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த காட்சியை கலாய்க்கும் விதமாக ஜன கன மன எனக்கு எனக்கு புரியவில்லை தமிழில் சொல்லுங்கள் என்று கீர்த்தி சுரேஷ் கேட்பது போலவும் அதற்கு பேசாமல் போயிடு அதுதான் உனக்கு நல்லது என்று கடைக்காரர் கூறுவது போலவும் ஒரு மீம் இணையத்தில் தியாக பரவி வருகின்றது.

இவர்களுடைய தமிழ் ஆர்வத்தை இன்னும் எதில் எல்லாம் கொண்டு வந்து நுழைத்து நம்மை பாடாய்படுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் பொதுவான சினிமா ரசிகர்கள்.

ஹிந்தி தெரியாது போயா என தமிழ் நாட்டில் ஒரு கூவு கூவிவிட்டு அடுத்த நாளே தான் நடிக்கவுள்ள ஹிந்தி படத்தின் பூஜையில் கலந்து கொண்டவர் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி சென்றிருந்த கீர்த்தி சுரேஷிடம் தமிழ் பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி எழுப்பிய போது தமிழில் பேச முடியாது நான் ஆந்திராவில் இருக்கிறேன் என்று கூறியவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam