பள்ளி நண்பருடன் காதல் திருமணம்..? – கீர்த்தி சுரேஷ் தாய் கூறிய பதிலை பாருங்க..!

திரைத்துறைக்குள் வந்த குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஹீரோயின் சென்றிக் திரைப்படங்களிலும் கூட நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய பள்ளி நண்பரும் நீண்ட காலருமான ரிசார்ட் உரிமையாளருமான ஒருவரை நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சமீப காலமாக இணையத்தில் வைரல் ஆகி வந்த.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் ரெமோ உள்ள திரைப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார்.

அடுத்தடுத்து நடிகர்கள் விக்ரம் விஜய் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இடையில் பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்ற இவர் தற்பொழுது ரகு தாத்தா மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கவர்ச்சி அவதாரமும் எடுத்திருக்கிறார் மணி மேலும் தன்னுடைய உடல் எடையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனத்துடன் இருக்கும் இவர் அன்றாடம் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

அடிக்கடி இவருடைய திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கை. அந்த வகையில் சமீபத்தில் ரிசார்ட் உரிமையாளர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

இவர் கீர்த்தி சுரேஷ் பள்ளிக்கால நண்பர் என்றும் கூறப்பட்டது. இது குறித்து இவருடைய தாய் மேனகா தற்போது ஒரு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அவர் கூறியதாவது இது எந்த ஒரு அடிப்படையும் இல்லாத பொய்யான தகவல்.

ஏதேனும் பரபரப்பை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே இப்படியான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாதிரி வெளியாகும் செய்திகளை நாங்கள் பார்ப்பது கூட கிடையாது.

கீர்த்தி சுரேஷின் திருமணம் தொடர்பான சமூக வலைதளங்களின் பசிக்கு கீர்த்தி சுரேஷின் திருமணம் தான் தீனியாக இருக்கிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் மேற்கொண்டு இதை பற்றி பேச எதுவும் கிடையாது என பொட்டியில் அடித்தார் போல் பதில் கொடுத்து இருக்கிறார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version