சாலையோரம் நின்று கீர்த்தி சுரேஷ் செய்யும் வேலையை பாருங்க.. பாத்தாலே எச்சில் ஊறுதே..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தங்களுடைய க்யூட்டான சிரிப்பு மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவது உண்டு. அப்படியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெகு சில காலங்களிலேயே அதிகமான ரசிகர்களை பிடித்தவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பொதுவாகவே குறைந்த காலகட்டத்தில் அதிக ரசிகர்களை பிடிக்கும் நடிகைகள் சில காலங்களிலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். உதாரணத்திற்கு நடிகை ஸ்ரீ திவ்யா மாதிரியான ஒரு சில நடிகைகளை கூறலாம்.

அவர்களெல்லாம் சினிமாவிற்கு வந்தபோது எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றாலும் பிறகு போகப்போக அவர்களின் வரவேற்பு என்பது குறைய தொடங்கியது. ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் அதிலிருந்து மாறுபட்டவர் என்று கூறலாம்.

கீர்த்தி சுரேஷ் அறிமுகம்:

கீர்த்தி சுரேஷிற்கு முதல் படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இரண்டாவதாக அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அந்த திரைப்படத்தின் மூலம் மட்டுமே ரசிகர்களை பிடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு நடுவே தொடரி மற்றும் பைரவா என்ற இரு திரைப்படங்களில் அவரது நடிப்பு அதிக விமர்சனத்திற்கு உள்ளானது.

ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன் என்பது சரியாக இவருக்கு வரவில்லை என்றெல்லாம் பேசத்தொடங்கி இருந்தனர். இந்த நிலையில் தனது நடிப்பை நிலை நாட்டுவதற்காக அடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்த படம் நடிகையர் திலகம். நடிகையர் திலகம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு தென்னிந்தியா முழுவதும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

வைரல் வீடியோ:

இந்த நிலையில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக கொஞ்சம் கவர்ச்சியில் இறங்கியிருந்தார். திரைப்படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இது கொஞ்சம் பேசு பொருளாக ஆனது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ ஒன்று அதிக வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ரோட்டுக்கடை ஒன்றில் நின்று செம கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அதை பார்க்கும் ரசிகர்கள் பலருக்குமே நாமளும் இதை போல ரோட்டு கடையில் நின்று சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு அந்த வீடியோ அமைந்துள்ளது. தற்சமயம் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version