அனிருத்துடன் டேட்டிங்.. உறுதியான திருமணம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்..!

மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சினிமா பின்னணியை குடும்பத்தில் கொண்டவர். இவரது தந்தை ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர் என்பதோடு மட்டுமல்லாமல் இவரது அம்மாவும் மலையாள நடிகையாக திகழ்ந்தார்.

 

இதனை அடுத்து மலையாள திரைப்படங்களில் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

தமிழைப் பொறுத்த வரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமான இவர் இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளி வந்த மகாநதி திரைப்படம் தேசிய விருதை இவருக்கு பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் இவரை மிகச் சிறந்த நடிகையாக பிரகடனப்படுத்தியது.

இதனை அடுத்து திரைப்படங்களில் அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து பாலிவுட் பக்கம் திரும்பி இருக்கும் இவர் அட்லி இயக்கிய வெற்றி திரைப்படமான தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் பிரபல நடிகராக திகழும் தளபதி விஜய் உடன் கீர்த்தி சுரேஷ் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் கீர்த்தி நடிக்கும் திரைப்படமான ரிவால்வர் ரீட்டா திரைப்படத்திற்கு தளபதி விஜய் பொருளாதார ரீதியில் உதவிகளை செய்து வருவதாக இணையங்களில் விஷயங்கள் கசிந்தது.

இந்நிலையில் பாலிவுட் திரைப்படமான பேபி ஜான் திரைப்படத்தில் நடிகர் வருண் தவானுடன் நெருக்கமான காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. இதனை அடுத்து இளம் இசையமைப்பாளர் அனிருத்தோடு இணைத்து கிசுகிசுக்கள் வெளி வந்துள்ளது.

அனிருத்துடன் டேட்டிங்.. 

அந்த வகையில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தோடு கீர்த்தி சுரேஷ் டேட்டிங் சென்றதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இது ஆதாரமற்ற விஷயம் என்று கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் மறுத்திருக்கிறார் .மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஏற்கனவே துபாயில்  தொழிலதிபரோடு கீர்த்தி சுரேஷ் டேட்டிங் சென்று வருவதாக வதந்திகள் எழுந்த நிலையில் அந்த நபரோடு ஒன்பது ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற விஷயங்கள் வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இதை தொடர்ந்து தற்போது அனிருத்தோடு கிசுகிசுக்கப்பட்டு இருக்கும் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் கீர்த்தியின் அப்பா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..

எனினும் இந்த சலசலப்புக் எல்லாம் சற்றும் அசராத கீர்த்தி சுரேஷ் சினிமாவில் கவனத்தை செலுத்தி வருவதோடு தற்போது ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா கன்னிவெடி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இது போலவே தெலுங்கிலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பேன் இந்திய திரைப்படமான கல்கி 2898 ஏடி படத்தில் புஜ்ஜி என்கிற ரோபோவுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

இதிலிருந்து ரசிகர்கள் எவ்வளவு தான் தன்னை பற்றி பலரும் பல விதமாக பேசினாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் வேலையில் படு பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷை  பாராட்டி வருவதோடு இது போன்ற வதந்திகளை எண்ணி வருத்தப்படாமல் இருப்பது சிறந்தது என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி வருவதோடு கீர்த்தி சுரேஷின் அப்பா இசையமைப்பாளர் அனிருத்துக்கும் தன் மகளுக்கும் எந்த விதமான உறவும் இல்லை என்பதை ஓபன் ஆக சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதை நண்பர்களோடு பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version