“தேக்கு உடம்புடா.. ஈஸியா தாங்கிடுவேன்..” தீடீரென டென்ஷன் ஆன கீர்த்தி சுரேஷ்..!

மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மேனகாவிற்கும் பல மலையாள திரைப்படங்களை தயாரித்த சுரேஷிக்கும் பிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சிறு வயதிலேயே மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளை பெற்றவர்.

இதனை அடுத்து இவர் வளர்ந்த பிறகு ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு மலையாள படத்தில் முதலில் கிடைத்ததை அடுத்து சிறந்த நடிப்பை பார்த்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

அந்த வகையில் இவர் தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். எனது முதல் தமிழ் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: இந்த நடிகர் தான் என் அப்பா.. நடிகை நயன்தாரா சொல்றத கேட்டீங்களா..?

அந்த வகையில் இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அமைத்துக் கொண்டார். இதனை அடுத்து 2018-ல் தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 போன்ற படங்களில் நடித்த இந்த படங்களில் போதிய அளவு வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் இவரால் பெற முடியவில்லை.

இதனை அடுத்து அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் கைவசம் உள்ளதால் அந்த படங்களில் கண்ணும் கருத்துமாக நடித்து வருகிறார்.

தேக்கு உடம்புடா..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் அப்போது கவர்ச்சிகர புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பார். ஆரம்ப நாட்களில் ஓரளவு கவர்ச்சி காட்டி வந்த இவர் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இப்போது கூடுதல் கவர்ச்சியில் களம் இறங்கி இருக்கிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் இவர் சிறப்பாக பதில் அளித்து இருந்தார். அது பற்றிய விரிவான செய்தியை தற்போது நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பேட்டியில் கீர்த்தியிடம் ஆந்திராவில் நீங்கள் உணவுகளை சாப்பிடும் போது அது காரமாக இருக்கும். எப்படி இந்த அளவுக்கு காரத்தை சாப்பிடுகிறார்கள் என்றெல்லாம் யோசித்தது உண்டா? என்ற கேள்வியை கேட்டிருந்தார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இதற்கு பதில் அளித்த பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் எனக்கு காரம் என்றால் இயற்கையாகவே பிடிக்கும். எங்கள் வீட்டிலும் காரமாகத்தான் சமைப்பார்கள். அதனால் ஆந்திராவில் உள்ள உணவுகளை உண்ணும் போது காரமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்தது கிடையாது.

திடீரென டென்ஷன் ஆன கீர்த்தி..

மேலும் நான் குஜராத்தில் பிறந்தவள் கிடையாது. சென்னையில் பிறந்து வளர்ந்தவள். எனவே ஆந்திராவின் காரம் என்னை எதுவும் செய்யாது. இது எனக்கு மிகவும் பிடித்த உணவு தான். மேலும் என் உடம்பு தேக்கு உடம்பு இந்த காரத்தை எல்லாம் ஈஸியா தாங்கிக் கொள்வேன் என்று கீர்த்தி சுரேஷ் கூறி இருக்கிறார்.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் தேக்கு உடம்புடா.. ஈஸியா தங்கிடும்.. என கீர்த்தி சுரேஷ் பங்கமாக கலாய்த்து தள்ளி இருப்பதோடு காரசாரமான உணவை சாப்பிடுவதால் தான் ஆள் பார்ப்பதற்கு இப்படி இருக்கிறார் என்று பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இந்த விஷயம் தான் இணையத்தில் வேகமாக பரவி கீர்த்தி சுரேஷ்க்கு காரமான உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். காரமான உணவுகளை சாப்பிடுபவர்கள் திடீர் என டென்ஷன் ஆவார்கள் அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி டென்ஷன் ஆவாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam