இதை கொண்டு போய் உங்க அம்மா கிட்ட குடுங்க.. தயாரிப்பாளரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ்.. என்ன ஆச்சு..?

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக விளங்கிய மேனகாவின் மகள் என்பது பலருக்கும் நன்றாகவே தெரியும்.

இவர் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

வாரிசு நடிகை என்பதால் திரையுலகப் பிரவேசம் எளிமையாக அமைந்ததை அடுத்து தெலுங்கில் இவர் நடித்த மகாநடி படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற இவர் தமிழில் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் தமிழில் முதல் படமாக இவர் இது என்ன மாயம் படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் அதிகளவு கவர்ச்சியை காட்டாமல் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கும் இவர் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருந்தாலும், அடுத்தடுத்து வெளி வந்த படங்கள் இவருக்கு சரியான வெற்றியை தராததை அடுத்து ராசி இல்லாத நடிகை என்ற பெயரை பெற்று விட்டார்.

மேலும் தமிழில் தான் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகளவு கிடைக்கவில்லை. எனினும் அக்கட தேசத்தில் சக்கை போடு போட்டு வரும் இவர் தெலுங்கு படங்களில் அதிக அளவு வாய்ப்புகளைப் பெற்று நடித்து வருகிறார்.

இதைக் கொண்டு போய் அம்மா கிட்ட கொடுங்க..

இதனை அடுத்து தற்போது கீர்த்தி சுரேஷ் கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் விரைவில் வெளி வரக் கூடிய படங்களாக ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகியவை உள்ளது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் எமோஷனலாக ஒரு பதிவினை பதிவிட்டு இருக்கிறார்.

இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியும் உள்ளது.

இதற்குக் காரணம் மாமன்னன் திரைப்படம் இவருக்கு மீண்டும் ஒரு கீட்டை கொடுத்தது. இதில் லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில்  தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் அடுத்த படமான சைரன் படத்தில் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் இவர் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களை மகாராஜா தயாரிப்பாளரை எட்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் நிறுவனத்தின் ஆரம்பத்தையும் எட்டு வருடங்களுக்குப் பிறகு உங்களது வளர்ச்சியும் பார்த்து பெருமை அடைவதாக கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளரிடம் சொன்ன கீர்த்தி..

மேலும் அந்த படம் நிறுவனத்தைப் பற்றி பெருமையாக பேசி இருக்கக் கூடிய கீர்த்தி சுரேஷ் உங்கள் வளர்ச்சி பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துவதோடு இது சூப்பரான வளர்ச்சி இதைப் பார்த்தால் எல்லோரையும் விட உங்கள் அம்மா ரொம்ப சந்தோஷப்படுவார்.

எனவே நீங்கள் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு உங்க அம்மாவிற்கு இது தான் என்று கூறி இருக்கிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துக் கொண்டிருக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தையும் மகாராஜா தயாரிப்பாளர் ஜெகதீஷ் தான் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version