3,61,895 ரூபாய்..! – ஆம், கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தும் சாதாரண ஒரு பொருளின் விலை இது..! – ரசிகர்கள் ஷாக்..!

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் மும்பை விமான நிலையம் வந்திருந்த பொழுது அங்கே சுற்றியிருந்த ரசிகர்களின் கேமிராவின் கண்களில் சிக்கினார்.

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பெரிய பின்புலம் கொண்டவர் என்பதால் எந்த ஒரு பெரிய கஷ்டமும் இல்லாமல் திரைத்துறையில் எளிமையாக அடியெடுத்து வைத்தார்.

ஆனால் இவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் ரசிகர்களை கவர தவறினாலும் கூட அடுத்தடுத்த நடித்த இவருடைய படங்கள் இவருக்கு தேசிய விருது பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு சென்றது.

பொதுவாக சினிமா பிரபலங்கள் தாங்கள் பயன்படுத்தக் கூடிய சிறு சிறு பொருளைக்கூட விலை உயர்ந்ததாக தான் வாங்குவார்கள். அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் 3,63,895 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி இருக்கிறார்.

என்ன பொருள் என்று தெரிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கில் தசரா மற்றும் போலோ சங்கர் என இரண்டு திரைப்படங்களிலும் தமிழில் மாமன்னன் மற்றும் சைரன் என இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன. விரைவில், இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அப்போது அவர் அணிந்து வந்திருந்த ஹேண்ட் பேக்-கின் விலைதான் தற்பொழுது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version