இந்த சாதி ஒழிப்பு.. ஹிந்தி எதிர்ப்பு.. போன்ற விஷயங்கள் தான் சமீப காலமாக சினிமா இயக்குனர்களின் ட்ரெண்டாக இருக்கிறது.
தொடர்ந்து சாதி ஒழிப்பு சம்பந்தமான படங்கள் வந்து கொண்டிருகின்றன. இதனால் சாதி ஒழிக்கிறதோ இல்லையோ இரு வேறு சமூகங்களுக்கு இடையே மனக்கசப்புகளையும் மனத்தாங்கல்களையும் இன்னும் வலுப்படுத்துகிறது என்றுதான் கூறுகிறார்கள் பொதுவான சினிமா ரசிகர்கள்.
ஆனால், வெறும் வசூலுக்காகவும் பரபரப்புக்காகவும் மக்களுக்கிடையே வஞ்சம் வளர்க்கும் வகையில் திரைக்கதைகளை அமைத்து இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு வசூல் வர வேண்டும் என்ற நோக்கில் சினிமா இயக்குனர்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக இருக்கிறது என்று புலம்பி வருகிறார்கள் ரசிகர்கள். நாங்கள் படம் பார்க்க வருவது பொழுதுபோக்குக்காகவா அல்லது உங்களுடைய இந்த சாதி சண்டையை பார்ப்பதற்காகவா…?
கருத்து சொல்வதற்கு ஆயிரம் வழி இருக்கிறது.. ஆயிரம் கருத்துக்கள் இருக்கின்றன.. ஆனால் எந்நேரமும் இந்த சாதி ஒழிப்பு பிடித்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தால் பொழுதுபோக்கு என்ற ஒரு அம்சம் எங்கே இருக்கும்.. கதை யோசிக்க தெரியாது இயக்குனர்கள் ரசிகர்களை கவரும் விதமாக காட்சிகளை அமைக்க தெரியாத இயக்குனர்கள் தான்.. இப்படி சாதிய விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு சமூகத்திற்குள் ஒரு ஸ்திரத்தன்மை வந்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்குமோ..? என்ற சந்தேகம் எல்லாம் எழுகிறது. ஒரு திரைப்படம்.. இரண்டு திரைப்படம்.. என்றால் பரவாயில்லை. வருடா வருடம் இப்படியான கருத்துக்களை கொண்டே திரைப்படங்கள் பெருகிக்கொண்டே போகின்றது.. என்று கேப்டன் மில்லர் படத்தை பார்த்து ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.
மறுபக்கம் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா திரைப்படத்தில் NCC-யில் தமிழில் கமாண்ட் செய்ய வேண்டும் என்ற அளவுக்கு இறங்கி வந்து விட்டார்கள்..?
தமிழில் என்சிசி கமெண்ட் செய்தால் ஒருவேளை அவர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே ஏதேனும் ராணுவத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்களா..? எந்த மாநிலத்திற்கு சென்றாலும் எம் சி சி கமெண்ட் ஹிந்தியில் தான் இருக்கும்.
ஏனென்றால் ராணுவ முகாம்கள் அமைந்திருப்பது அனைத்துமே வடக்கு மாநிலங்களில் தான். அங்கே சென்று நாட்டை காப்பாற்றுவது குறித்து பேசிக் கொண்டிருப்பார்களா..? அல்லது தமிழில் கமெண்ட் செய்யுங்கள்.. அப்பதான் எனக்கு புரியும் என்று அதிகாரிகளோடு சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்களா..?
இப்படியே போய்க் கொண்டிருந்தால்.. தமிழ் சினிமா ரசிகர்களை மென்டல் ஆக்கி ரோட்டில் சுற்ற விடுவார்கள் போலிருக்கிறது இந்த இயக்குனர் என்று புலம்பித் தள்ளி வருகிறார்கள் ரசிகர்கள்.
மேலும், உண்மையாக தமிழ் மீது ஆர்வம் இருந்தால் ரகு தாத்தா என்ற தலைப்பை இரகு தாத்தா என்று தான் எழுதியிருப்பார்கள். இந்த படத்தில் ஹிந்தி தெரியாது போயா.. என்று சொல்லும் கீர்த்தி சுரேஷ்.. நிஜ வாழ்கையில் நன்றாகவே ஹிந்தி பேசக்கூடியவர்.. ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.. ஆனால்.. தன் படங்களில் ஹிந்தி படிக்கக்கூடாது.. என்று உலட்டி கொண்டிருக்கிறார் என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
எடு செரு-ப்பை நா….🤣🤣🤣 pic.twitter.com/zV1tvkdFeI
— Savukku Shankar Army (@Mahi1987Mass) January 13, 2024
ஹிந்தி கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆதரங்களுடன் விளக்கி சொன்னால்.. அதற்கும் ஒரு பதில் வைத்துள்ளார்கள் இந்த ஹிந்தி எதிர்ப்பு போராளிகள்.. “நாங்க ஹிந்தி படிக்க வேணாம்ன்னு சொல்லல.. திணிக்க வேணாம்ன்னு தான் சொன்னோம்..” என்பது தான் அந்த தலை சிறந்த பதில்.