பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரான சுரேஷ் மகளாகிய கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதன்பின் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு கதாநாயகி அந்தஸ்தோடு என்ட்ரி கைகொடுத்தார். இவரை தமிழில் முன்னணி கதாநாயகியாக மாற்றிய திரைப்படம் ரஜினி முருகன் தான்.இந்த படத்தில் இவர் தனது நடிப்பை மிக நன்றாக வெளிப்படுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து நிறைய படங்களில் நடித்தார். இதையடுத்து இவருக்கு நல்ல பெயர் தமிழ்த்திரையுலகில் கிடைத்தது.மேலும் இவர் விஷாலுடன் இணைந்து சண்டைக்கோழி 2 என்ற படத்தில் கிராமத்து பெண்ணாக வந்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.
மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த மஹாநதி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்ததின் மூலம் தென்னிந்திய சினிமா உலகை தன் பக்கம் ஈர்த்த இவருக்கு மிகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இந்திய மொழிகளில் நடிப்பதோடு நின்றுவிடாமல் பாலிவுட் வரை சென்று தனது நடிப்புத் திறனை நிரூபித்திருக்கும் இவர் குட்லக் ஷகி, சாணி காகிதம், சர்க்கார் வாரி பட்டா, வாசி என ஒவ்வொரு மொழிக்கும் ஒரு படம் என்ற விகிதத்தில் வெளிவந்திருந்தது.
தற்போது இவர் மாமன்னன், தசரா, போலோ சங்கர் உள்ளிட்ட 3 படங்களில் கமிட்டாகி மிக பிஸியாக நடித்து வருகிறார். எப்போதுமே ஸ்கின் ஷோ காட்ட மாட்டேன் என்று கூறிவந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டுக்கு சென்ற பின் அதை மாற்றிக் கொண்டார் போல.
அதை உண்மையாக்கும் வகையில் தற்போது தீபாவளி கொண்டாட்டங்களை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் தற்போது வைரலாக வலைதளங்களில் வந்துள்ளது.
அந்தவகையில், மொட்டைமாடியில் மத்தாப்பும் கையுமாக தன்னுடைய மத்தாப்பு போன்ற சிரிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்க கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.