கீர்த்தி சுரேஷ் கட்டியுள்ள இந்த புடவையின் விலை என்ன தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ், முதலில் அறிமுகமான படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் இந்த படத்தில் முதன்முதலில் தமிழில் அறிமுகமானார் இந்த படம் வரவேற்பை பெறாவிட்டாலும் கீர்த்தியின் நடிப்பும், அசத்தலான அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

இதையடுத்து, அவர் நடித்த ரஜினி முருகன் படம் மெகா ஹிட் படமாக கீர்த்தி சுரேஷ்க்கு அமைந்தது. ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து விஜயுடன் பைரவா என்ற படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், தனுஷ் உடன் தொடரி படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்திலும் நடித்தார். விஜயுடன் இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்த படம் சர்கார்.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவர். இவரது அம்மா மேனகா. 1980களில் தமிழில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அப்பா சுரேஷ், மலையாள பட தயாரிப்பாளர்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் மிகப் பெரிய அளவில் நடிப்பில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் தமிழில் வெளிவந்த நடிகையர் திலகம். நடிகை சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு படம். இதே படம் தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் வெளிவந்தது.

தேசிய விருது

இந்த படத்தில் நடித்ததற்காக, கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

தமிழில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக சைரன் 108 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைரன் படத்துக்கு முன், கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தெறி படம் இந்தியில் ரீமேக்

இந்நிலையில் டைரக்டர் அட்லி தயாரிக்கும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் ரகுதாத்தா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கீர்த்தி சுரேஷூக்கு சமீபகாலமாக தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் இல்லை. சைரன் படமும் எதிர்பார்க்க வெற்றியை தரவில்லை.

ஷங்கர் மகள் திருமணம்

இதற்கிடையே இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம், சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது அதில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சினிமா பிரபல நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதில் அட்டகாசமான புடவையில் காட்சியளித்தார் கீர்த்தி சுரேஷ். அவர் கட்டியிருந்த புடவையின் விலை குறித்து தகவல் வெளியானது. அதன்படி அந்த புடவை விலை கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

புடவை விலை

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் எப்போதும் சிம்பிளாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், ஷங்கர் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான புடவையை கட்டி வந்தாரா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் கட்டியுள்ள இந்த புடவையின் விலை 3 லட்சம் ரூபாயா என்று பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version