ங்கோ** தே* பை** என பேசிய கீர்த்தி சுரேஷ்..? தீயாய் பரவும் வீடியோ..! – உண்மை என்ன..?

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில், மலையாளத்தில் மிகச் சிறந்த இளம் நடிகையாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நல்ல கேரக்டர்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினி முருகன் படங்களில் நடித்த போது, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன.

தொடர்ந்து சர்க்கார், பைரவா படங்களில் நடிகர் விஜயுடன் நடித்தார். இந்த படங்களும் கீர்த்தி சுரேஷ்க்கு பேசக்கூடிய படங்களாக அமைந்தன.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில், ஆரம்பத்திலேயே மிக நல்ல ஒரு வாய்ப்பை பெற்றார் என்றால், அது நடிகையர் திலகம் படத்தில் நடித்ததுதான்.

ஏனெனில் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என போற்றப்பட்டவர் சிவாஜி கணேசன். அதே போல் நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர் நடிகை சாவித்திரி தேவி.

அவ்வளவு பெருமை, புகழ் வாய்ந்த நடிகை சாவித்திரி தேவி வாழ்க்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து, சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமா கலைஞர்கள் மத்தியிலும் பலத்த பாராட்டை பெற்றார்.

கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் ஒரு சினிமா நடிகைதான். கடந்த 1980 முதல் 86 வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

கலைத்துறை குடும்பம்…

கே பாலசந்தர் இயக்கத்தில், 1980களில் வெளிவந்த நெற்றிக்கண் படத்தில் அப்பா, மகன் என 2 ரோல்களில் நடித்திருப்பார் ரஜினிகாந்த். அதில் மகன் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் மேனகா.

அவர்தான், கீர்த்தி சுரேஷின் அம்மா. ராமனின் மோகனம், ஜானகியின் மந்திரம் என பாடல் காட்சியில் ரஜினி, மேனகா நடித்த பாட்டு அப்போதைய டிரண்டிங் பாடல்களில் ஒன்றாக இருந்தது.

கீர்த்தி சுரேஷின் அப்பா, சுரேஷ் மலையாளப்பட தயாரிப்பாளர். பல படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் லியோ படம் குறித்து விமர்சித்து பேசியது பயங்கர சர்ச்சையானது.

கீர்த்தி சுரேஷின் பாட்டியும் ஒரு நடிகை தான். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில், நடிகர் சத்யராஜ் அம்மாவாக நடித்திருப்பார்.

இப்படி அப்பா, அம்மா, பாட்டி என கலைத்துறை சார்ந்த குடும்பத்தில் ஒருவராக இருந்து சினிமா அசத்திக்கொண்டு இருப்பவர்தான் கீர்த்தி சுரேஷ்.

கெட்ட வார்த்தைகளை பேசுவது போல…

தொடர்ந்து தமிழில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவியுடன் நடித்த படம்தான் சைரன். அந்த படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் கெட்ட வார்த்தைகள் பேசியதாக, சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்துள்ள சைரன் திரைப்படத்தின் விழாவில் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் “ஒரு Cop மாதிரி Feel பண்றேன்” என பேசிய வார்த்தைகளை Mute செய்து விட்டுப் பார்த்தால், ஏதோ கெட்ட வார்த்தையில் அவர் பேசுவது போல இருக்கிறது.

ங்கோ** தே* பை** என பேசியதை போல பார்ப்பவர்களுக்கு தோன்றும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version