சினிமாவில் அறிமுகமான புதிதில் புசுபுசுவென சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்திருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கங்களில் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகரின் கவனத்தை ஈர்ப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த வீடியோவில் தன்னுடைய உடம்பை வில் போல வளைத்து ஊஞ்சலாடும் கீர்த்தி சுரேஷின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.
சமீபத்தில், சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் ஆக்ரோஷமான பழிவாங்கும் மனைவி என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை மிரட்டி இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
View this post on Instagram
நிலையில் மொட்டை மாடியில் யோகா பயிற்சி செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா… இல்ல ரப்பரா..? இப்படி வளையுது..? என்று கிறுகிறுத்துப் போய் கிடைக்கின்றனர்.