விதிமீறலில் ஈடுபட்ட பிரபலத்துடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ்..!

ஒரு சில திரைப்படங்களின் வழியாகவே தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட இது என்ன மாயம் திரைப்படம்தான் இவர் கதாநாயகியாக நடித்த முதல் தமிழ் படமாகும்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் விக்ரம் பிரபு நடித்திருப்பார். சமந்தாவிற்கு ஒரு மாஸ்கோவின் காவேரி போல கீர்த்தி சுரேஷிற்கு இது என்ன மாயம் படத்தை கூறலாம். இருவருக்குமே முதல் படம் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை.

கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்த வாய்ப்பு:

ஆனால் அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பலருக்கும் கீர்த்தி சுரேஷை க்ரஷ்ஷாக மாற்றிய திரைப்படம் என கூறலாம். அதனை தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா என வரிசையாக பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

keerthisuresh-1

அதன் பிறகு அவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் விஜய் நடித்த சர்க்கார், சண்டை கோழி 2 என வரிசையாக மீண்டும் சில ஹிட் படங்களை கொடுத்தார்.

தற்சமயம் பேன் இந்தியா திரைப்படமான பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 திரைப்படத்தில் புஜ்ஜி என்னும் கதபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதை அவர் சிறப்பாக செய்துள்ளதாக பலரும் அவரை பாராட்டி வந்தனர்.

பிரபல யூ ட்யூப்பர்:

இந்த நிலையில் யூ ட்யூப்பர் இர்ஃபானும் கீர்த்தி சுரேஷும் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே யூ ட்யூப்பில் தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கிறார் யூ ட்யூப்பர் இர்ஃபான். இது மட்டுமின்றி அடுத்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார் இர்ஃபான்.

ஏற்கனவே அவருக்கு நிறைய ரசிக பட்டாளங்கள் இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அந்த சப்ஸ்க்ரைபர் இன்னமும் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் இர்ஃபான் தனக்கு பிறக்க போகும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை வெளியிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

irfan-keerhty

இதற்க்கு பலத்த எதிர்ப்பு வந்ததால் அந்த வீடியோவை நீக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டிருந்தார் இர்ஃபான். இந்த நிலையில் தற்சமயம் நடிகை கீர்த்தி சுரேஷுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் இர்ஃபான். சூப்பர் நைட் பெர்சன் என கேப்தன் இட்டு அந்த புகைப்படத்தை அவர் பதிவிட்ட நிலையில் தற்சமயம் அது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version