தமிழில் வெகு காலங்களாகவே தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கும் நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் வந்த பொழுது பெரிதாக அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட இரண்டாவது திரைப்படத்திலேயே அதிக வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து பெரும் நடிகர்களின் படங்களில் வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்கும் போது பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.
அட தொயரத்த
ரஜினி முருகன் திரைப்படம் நடித்த தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்களில் கதாநாயகிக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதனால் கடவுளுக்காக கதாநாயகன் போலவே கீர்த்தி சுரேஷ் வந்து கொண்டே இருப்பார் என்று இருந்தது.
ஆனால் போகப்போக தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிப்பதால் சாமி ஸ்கொயர், சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றாலும் கூட அந்த திரைப்படங்களில் நடித்தார் இந்த நிலையில் இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.
தொடர்ந்து தெலுங்கிலும் பிரபலமாக தொடங்கினார் நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் சர்க்காரி வாரி பட்டா என்கிற திரைப்படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
விரைவில் தனிக்கட்சி
சரி இனிமேல் படங்களில் எல்லாம் இவர் கவர்ச்சி காட்டிதான் நடிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்து வந்த நிலையில் பிறகு மீண்டும் நடித்த திரைப்படங்கள் எல்லாம் எளிதாக கவர்ச்சி இல்லாமலே நடித்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பிலிம்பேர் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அங்கு கவர்ச்சி ஆடை அணிந்து வந்திருந்தது பிரபலமாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரகு தாத்தா என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்த திரைப்படம் ஹிந்தி திணிப்புக்கு எதிரான ஒரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசும்பொழுது சில சர்ச்சையான விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது வருங்காலத்தில் எனக்கு அரசியலுக்கு வருவதற்கான ஆசை வரலாம்.
கீர்த்தி சுரேஷை வாழ்த்தும் ரசிகர்கள்
ரகுதாத்தா திரைப்படம் இந்தி திணிப்பு தொடர்பான திரைப்படமாகும். தமிழ்நாட்டில் மட்டும்தான் இது போன்ற திரைப்படங்களை எடுக்க முடிகிறது என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறும் பொழுது நான் இந்திக்கு எதிராக பேசிவிட்டு ஹிந்தியிலேயே படங்கள் நடிப்பதாக எனக்கு கருத்து வந்தது ஆனால் அவர்களுக்கு கூறிக் கொள்வது என்னவென்றால் நான் இந்தி மொழியை எதிர்க்கவில்லை.
ஹிந்தி திணிப்பைதான் எதிர்க்கிறேன் என்று கூறியிருந்தார் கீர்த்தி சுரேஷ் இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். இதற்கு ரசிகர்களும் அடுத்து தனி கட்சி துவங்கி ஆட்சியை கைப்பற்ற வாழ்த்துக்கள் கீர்த்தி என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.