விஜய்யுடன் தொடர்பு.. இதை செஞ்சா உண்மை ஆகிவிடும்.. குண்டை தூக்கி போட்ட கீர்த்தி சுரேஷ்..!

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் திரைப்படம் கை கொடுக்கவில்லை என்றாலும் இரண்டாவதாக அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு பெருமளவில் கை கொடுத்தது.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு ரஜினி முருகன் திரைப்படம்தான் காரணமாக அமைந்தது. அதேபோல பிறகு கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பைதான் பெற்று கொடுத்தது.

இரண்டு மொழிகளிலும் வரவேற்பு:

நிறைய திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும் அவரது நடிப்புக்கு வெகுமதியாக அமைந்த திரைப்படம் நடிகையர் திலகம் திரைப்படம்தான். அந்த திரைப்படத்திற்கு பிறகுதான் தெலுங்கு தமிழ் இரண்டு மொழியிலும் அதிகமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் தற்சமயம் பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன. ஏற்கனவே ரகு தாத்தா, கன்னிவெடி, போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த திரைப்படங்கள் எல்லாமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக அமைந்திருப்பதால் இவை வரிசையாக வெளியாகும்போது கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டை அவை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி:

தமிழில் தொடர்ந்து விக்ரம், விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்களோடு நடித்து வந்தவர் கீர்த்தி சுரேஷ். இதற்கு நடுவே தற்சமயம் பாலிவுட்டில் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்தான் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை அட்லீ இயக்கவில்லை என்றாலும் கூட இதற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷிற்க்கும் விஜய்க்கும் இடையே காதல் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த வதந்தி கொஞ்சம் பெரிதாகவே பரவி வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இதற்கு பேட்டியில் பதில் அளித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதில் அவர் கூறும் பொழுது வதந்திகளை குறித்து விஜய் சார் கூறும் பொழுது உண்மைக்கு விளக்கம் சொன்னால் தெளிவாகும், ஆனால் வதந்திகளுக்கு நாம் விளக்கம் கொடுத்தோம் என்றால் அது உண்மை என்று ஆகிவிடும் என்று சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது ரொம்பவும் உண்மை. தேவையில்லாத விஷயங்களுக்கு என்னுடைய எனர்ஜியை செலவு பண்ணி விளக்கம் தரமாட்டேன் என்று கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version