விஜய் இப்படி பன்னுவாருன்னு எதிர்பாக்கல.. சொல்லாம இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்…!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மூலமாகவே பெரிதாக வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

அதற்கு முன்பே அவர் மலையாளத்தில் குழந்தை கதாபாத்திரங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் தமிழ் சினிமாவில்தான் கதாநாயகியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது

இது என்ன மாயம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

தமிழில் தொடர் வெற்றி:

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கும் இந்த திரைப்படத்தில் அதிக வரவேற்பு கிடைத்தது. 2016 கீர்த்தி சுரேஷிற்கு முக்கியமான வருடம் என்று கூறலாம். அவர் நடித்த தொடரி, ரெமோ மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

அதற்குப் பிறகு அவர் நடித்த பைரவா திரைப்படம்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. பைரவா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒழுங்காகவே நடிக்கவில்லை என்று பேச்சுக்கள் அதிகமாக இருந்து வந்தன. அதற்குப் பிறகு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.

2018 ஆம் ஆண்டு வந்த மகாநதி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரில் வெளியானது. தமிழ்,தெலுங்கு இரண்டு மொழியிலும் இந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

சாவித்திரி படம்:

ஏனெனில் நடிகை சாவித்திரியும் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரபலமானவர் என்பதால் இந்த திரைப்படம் இரண்டு மொழிகளிலும் வெளியானது. இந்த திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்.

அதுவரை நடிப்பு தொடர்பாக அதிக விமர்சனத்திற்கு உள்ளான கீர்த்தி சுரேஷ் அந்த படத்திற்கு பிறகு அதிகமாக பாராட்டப்பட்டார். இந்த நிலையில் நடிகர் விஜய் அவரை பாராட்டிய சம்பவமும் நடந்தது. அது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

சர்கார் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த பொழுது சாவித்திரி என கீர்த்தி சுரேஷை அழைத்திருந்தார் விஜய். அந்த நிகழ்வு குறித்து கீர்த்தி சுரேஷ் கேட்ட பொழுது அது நானே எதிர்பார்க்காத ஒன்று. விஜய் திடீரென்று அப்படி அழைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

இப்பொழுது நினைத்தால் கூட எனக்கு அது பிரம்மிப்பான ஒரு விஷயமாக இருக்கிறது. அவர் அந்த இடத்தில் என்னை அப்படி அழைத்திருக்க தேவை கிடையாது. இருந்தாலும் என்னை பாராட்ட வேண்டும் என்பதற்காக விஜய் சாவித்திரி என்று என்னை அழைத்தார் என்று அது குறித்து பேசி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version