விஜய் கட்சி தொடங்கியதும் நான் கேட்ட முதல் விஷயம் இது தான்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!

தமிழ் சினிமாவில் நடித்த இரண்டாவது திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இரண்டாவது திரைப்படம் ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் கீர்த்தி சுரேஷ்.

அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. இருந்தாலும் சிவகார்த்திகேயன் படத்தில்தான் அதிக வரவேற்பு கிடைத்தது அதனை தொடர்ந்து ரெமோ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

கீர்த்தி சுரேஷ்

பிறகு சீம ராஜா திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிளாஷ்பேக் கதைகளில் மட்டும் வருவார் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் அதிகமாக சேர்ந்து நடித்தது நடிகர் விஜய் கூடதான்.

பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய இரண்டு திரைப்படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷிற்கும் விஜய்க்கும் நடுவே கிசுகிசுக்களும் இருந்து வந்தன. விஜய்யும் கீர்த்தி சுரேஷும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூட அப்பொழுது பேச்சுக்கள் இருந்து வந்தன.

விஜய் கட்சி

ஆனால் கீர்த்தி சுரேஷிற்கு வேறு ஒரு நபருடன் ஏற்கனவே திருமணத்திற்கு பேசி வைத்தாகி விட்டது என்று அவரது குடும்பம் இதற்கு பதில் அளித்து இருந்தது. அதற்கு பிறகுதான் இந்த சர்ச்சை நீங்கியது. இந்த நிலையில் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் தெலுங்கில் சர்காரி வாரி பட்டா திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு வரவேற்புகள் அங்கும் அதிகரித்தே இருக்கின்றன. தொடர்ந்து அங்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். தெலுங்கில் நானி நடித்த தசரா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நான் கேட்ட முதல் விஷயம்

அதுவும் தெலுங்கில் அவர் அதிக வரவேற்பை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் கட்சித் துவங்கிய சமயத்தில் தன்னிடம் பேசிய விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அதில் அவர் கூறும் பொழுது விஜய் கட்சி துவங்கியதை என்னிடம் கூறியவுடன் எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருந்தது நானும் உங்கள் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து கொள்கிறேன் என்று அவரிடம் கேட்டேன். பிறகு கட்சி தொடங்கிய போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டேன்.

அதற்கு பதில் அளித்த விஜய் இன்னும் இரண்டு திரைப்படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று நான் கூறியதுதான் எனக்கே கொஞ்சம் நெருடலாக இருந்தது மற்றபடி சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று கூறினார் விஜய். என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version