விஜய் எதுக்கு அப்படி செய்யணும்.. சத்தியமா இப்படி பண்ணுவார்ன்னு நான் நெனைக்கல.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

கேரளாவை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஹோம்லி லுக்கிற்கு பக்காவாக பொருந்தும் முகஜாடை கொண்டிருப்பார்.

இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் என்பதால் அழகு தமிழ் பெண்ணாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

அம்மா மேனகா சுரேஷ், பாட்டி சரோஜா என திரைத்துறை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சுலபமாக படவாய்ப்புகளை பெற்று சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

ஆனால், தொடர்ந்து அவரின் திறமையால் தான் சினிமாவில் அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: பெட்ரூமில் வெறும் உள்ளாடையுடன் நடிகை நிஷா கணேஷ்.. எசகு பிசகான போஸ்.. கிறுகிறுத்து கிடக்கும் ஃபேன்ஸ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆவதற்கு முன்னர் 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.அந்த படம் தான் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் உடன் ஜோடி போட்டு ரஜினி முருகன் திரைப்பதில் நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.

தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 , நடிகையர் திலகம், சாணிக்காயிதம், மிஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஓ.. இது தான் சரக்கு கப்பலா.. கையில் சரக்குடன் மிதக்கும் பிரியா பவானி ஷங்கர்.. வைரல் பிக்ஸ்..!

தற்போது கணேஷ் ராஜ் இயக்கத்தில் கண்ணிவெடி திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

விஜய் – கீர்த்தி சுரேஷ் காதல் கிசு கிசு:

விஜய் – கீர்த்தி சுரேஷ் இருவரு இணைந்து , பைரவா, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்கள். இதனிடையே ரகசியமாக காதலித்து வருவதாகவும்,

இவர் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போவதும். பல கோடி மதிப்புள்ள கார் ஒன்றை கீர்த்தி சுரேஷிற்கு விஜய் பரிசாக கொடுத்ததாகவும் டிசைன் டிசைனாக வதந்தி செய்திகள் வெளிவந்துது

அவ்வளவு ஏன் விஜய் கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக பழகி தான் தனது மனைவி , பிள்ளைகளை பிரிந்துவிட்டதாகவும்,

அரசியலில் குதித்து எம்ஜிஆர் – ஜெயலலிதா ஜோடி போன்று விஜய் – கீர்த்தி சுரேஷ் வலம் வருவார்கள் என்றெல்லாம் மீம்ஸ் சித்தரித்து செய்திகள் பறக்கவிட்டனர் நெட்டிசன்ஸ்.

ஆனால் லியோ படத்தில் திரிஷாவுடன் ஜோடிபோட்டு அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

விஜய் அப்படி பண்ணுவார்ன்னு சத்தியமா நினைக்கல:

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் தன்னை குறித்து பெருமையாக பேசியதை பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: வர்மா.. வொர்த்து வர்மா.. மைண்ட் ப்ளோயிங்.. குட்டியூண்டு உடையில் அரண்மனை 4 செட்டில் தமன்னா..!

கீர்த்தி சுரேஷிடம் ஆங்கர், சர்க்கார் ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் நீங்க நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் உங்களின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டினார்.

பெரிய லெஜெண்ட் அவ்வளவு பெரிய விழாவில் உங்களை பாராட்டியது எப்படி இருந்தது? என கேட்டதற்கு, ரொம்ப சந்தோசமா இருந்தது.

சார் படம் பார்த்துட்டு பேசினாரு.. சத்தியமா ஸ்டேஜ்ல வந்து அப்படி பேசுவார்னு எதிர்பார்க்கவே இல்ல. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. சத்தியமா நான் நினைக்கல அது ரொம்ப சர்ப்ரைஸ் தான்.

ரொம்ப சந்தோஷத்தையும் கொடுத்துச்சு. அந்த நேரத்துல அவர் அதை சொல்லாம கூட இருந்திருக்கலாம். ஆனால்,அத பத்தி தனியா எடுத்து மென்ஷன் பண்ணி பேசி இருந்ததெல்லாம் எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு என்று கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version