கீர்த்தி சுரேஷ் திருமணம்.. புடிச்சது புளியங்கொம்பு தான்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து.

அதன் பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். முதன் முதலில் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி தொடர் வெற்றி படங்களில் நடித்து,

இங்கு முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியில் இடம் பிடித்தார்.

கீர்த்தி சுரேஷ்:

குறுகிய காலகட்டத்திலேயே நடிகர் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களின் ஜோடி போட்டு நடித்து பெரும் புகழ்பெற்ற ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டார்.

இதனிடையே தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அங்கும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மகாநடி திரைப்படத்தில் நடித்து மிகச்சிறந்த நடிப்பு வெளிப்படுத்தி சாவித்திரி அம்மாவையும் மீண்டும் உயிர்ப்பித்தார். இந்த படத்தின் மூலம் மவுஸ் வேற லெவலில் உயர்ந்து விட்டது .

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

டாப் நடிகை:

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது திருமணம் செய்திகள் வெளியாகி வதந்தியாக வைரல் ஆகி வருகிறது.

ஆ மாதத்திற்கு ஒரு முறை கீர்த்தி சுரேஷ் திருமண தகவல் செய்தியாக வெளிவந்து விடுகிறது. முன்னதாக கேரளா அரசியல்வாதியின் மகன் ஒருவனை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் பரவியது.

அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் துபாயில் தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக திருமணம் செய்து கொள்ள போகும் நபர்,

அவர்தான் என பேச்சுக்கள் கிளம்பி பரபரப்பாக பேசப்பட்டது. இதை அவரது குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வந்தனர்.

இதனிடையே இசையமைப்பாளர் அனிருத்தை ரகசியமாக காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.

நகைக்கடை உரிமையாளர் மகனுடன் திருமணம்;

இந்நிலையில் தற்போது அந்த லிஸ்டில் கேரளாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மகன் ஒருவனை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 வருடங்களாக காதலித்து ரகசியமாக பழகி வருவதாகவும்,

விரைவில் அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய இருவீட்டா சம்பந்தத்துடன் முடிவெடுத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இதனை அறிந்த நெட்டிசன்ஸ் கீர்த்தி சுரேஷ் பிடிச்சாலும் புளியங்கொம்பா தான் பிடிச்சிருக்காங்க என கூறி வ்ருகிறார்கள்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மீண்டும் இது குறித்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மௌனம் கலைத்தால் மட்டுமே இந்த செய்தி குறித்த உண்மை தன்மை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version