“ப்பா.. இது உடம்பா..? இல்ல, ரப்பரா..?..” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா..? இல்ல ரப்பரா..? என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய உடலை வளைத்து யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இவர் தற்போது இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சமீபகாலமாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் இவ்வாறு திரைப்படங்களிலும் கிளாமராக நடிக்க தொடங்கியிருக்கிறார். மேலும் ஹீரோயினை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் நடிக்க ஆர்வம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகக்கூடிய வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கவருகிறார்.

கவர்ச்சியான புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது உள்ளிட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக நடந்து கொள்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அந்த வகையில், தற்போது லெகின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு யோகா செய்யும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா..? இல்லை ரப்பரா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …