வெள்ளை ஆப்பம் என்றால் அது கேரளா ஸ்பெஷல் என்று அனைவரும் அடுத்த நிமிடம் கூறி விடுவார்கள். அப்படிப்பட்ட கேரளத்து ஸ்பெஷலான ஆப்பத்தை நம் வீட்டில் செய்தால் அது அப்படி வரவில்லையே என்று ஏங்க கூடியவர்கள் இந்த முறையை ஃபாலோ செய்து செய்தால் கண்டிப்பாக மெது மெதுவென இருக்க கூடிய வெள்ளை ஆப்பம் உங்கள் வீட்டு நபர்களை மேலும் மேலும் சுவைக்க தூண்டும்.
உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த கேரளா ஆப்பத்திற்கு தேங்காய் பால் அல்லது காய்கறிகள் நிறைய போட்ட குருமாவை தொட்டுக் கொள்வதின் மூலம் இன்னும் எத்தனை ஆப்பங்கள் தருவார்கள் என்று ஏங்க வைக்க கூடிய அளவு அட்டகாசமான ஆப்பத்தை நீங்களே செய்து அசத்தி விடலாம்.
கேரளா ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்
1.இட்லி அரிசி இரண்டு கப்
2.கால் கப் பச்சரிசி
3.உளுந்து ஒரு கப்
4.வெந்தயம் சிறிதளவு
5.துருவிய தேங்காய் அரை கப்
6.இளநீர் இரண்டு
7.உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் மேற்கூறிய இட்லி அரிசியை ஒரு மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கப் இட்லி அரிசி மற்றும் கால் கப் பச்சரிசியை சேர்த்துக் கொள்ளவும்.
இதன் பிறகு இதனுடன் சிறிதளவு வெந்தயம் மற்றும் உளுந்தையும் சேர்த்து ஊற வைக்கவும். முக்கிய குறிப்பு என்னவென்றால் அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக தான் நீங்கள் ஊற வைக்க வேண்டும்.
ஆனால் அரைக்கும் போது இதை இரண்டையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளலாம். இந்த கலவையானது சுமார் 4 மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டரில் முதலில் உளுந்தை போட்டு அரைக்கவும்.
அது பொங்க பொங்க நீங்கள் தண்ணீர் எழுத்து அரைப்பது மிகவும் சூப்பராக இருக்கும். உளுந்து நன்கு அரை பட்டவுடன் அரிசியை போட்டு அதனை நன்கு அரைக்க வேண்டும். எந்த அளவு நீங்கள் மாவை நைசாக அரைக்கிறீர்களோ அந்த அளவுக்கு ஆப்பம் புசுபுசுவென மிருதுவாக கிடைக்கும்.
இதனை அடுத்து இதில் தேவையான அளவு தேங்காய் மற்றும் நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி அரையுங்கள். நன்கு அரைத்து விட்ட பிறகு நீங்கள் இந்த மாவினை ஒரு பாத்திரத்தில் விட்டு தேவையான அளவு உப்பை சேர்த்து விடுங்கள்.
பிறகு 8 மணி நேரம் கழித்த பின்பு இது பொங்கி மேலே எழும்பும். அதனை அடுத்து நீங்கள் ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து உங்களுக்கு தேவையான அளவு ஆப்பத்தை ஊற்றி எடுக்கலாம்.
ஆப்பத்தை ஊற்றும் பொழுது தேவையான அளவு தேங்காய் எண்ணெயை லேசாக விட்டு ஊற்றவும். ஆப்பம் வேகம் வரை மூடியை போட்டு வேக விடவும்.
இப்போது வெள்ளை நிற ஆப்பம் ரெடியாகிவிட்டது. சாப்டான இந்த ஆப்பத்தை நீங்கள் தேங்காய் பால் அல்லது வெஜிடபிள் குருமாவுடன் சாப்பிடும் போது சுவை செம டக்கர் ஆக இருக்கும்.