தற்சமயம் கேரளா சினிமா குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வரும் சர்ச்சையான விஷயமாக மாறி இருக்கிறது. சினிமாவை பொருத்தவரை எல்லா மொழியிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் கூட பெரிதாக யாரும் அதை கண்டு கொள்வது கிடையாது. சினிமா துறையும் அப்படியே இயங்கி வருகிறது.
வெளிவந்த செய்தி
ஒரு வேளை பிரபலங்கள் யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளுக்கு அழைத்தாலும் கூட அதை நடிகைகள் வெளியில் சொல்ல முடிவதில்லை. அப்படியே அவர்கள் நடிகர் சங்கத்திடம் கூறினாலும் கூட அதற்கு அவர்கள் நடவடிகை எடுப்பார்களா என்பது சந்தேகமான விஷயம் தான்.
போன பிக்பாஸில் கலந்து கொண்ட விசித்திரா தெலுங்கு சினிமாவிற்கு நடிக்க சென்ற பொழுது அவருக்கு நடந்த பாலியல் அத்திமீரல்களையும் அதை நடிகர் சங்கத்திடம் கூறி அவர்கள் அதற்கு நடவடிக்கை எடுக்காததையும் விளக்கி இருந்தார்.
நடிகைகளை பந்தாடும் பிரபலங்கள்:
இப்படி இருப்பதால் கேரளா அரசே தற்சமயம் அதில் இருக்கும் அட்ஜஸ்மென்ட் பிரச்சினைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்காக ஹேமா கமிட்டி என்கிற ஒரு கமிட்டியை அமைத்தது.
அந்த கமிட்டி கொடுத்த தகவல்கள்தான் தற்சமயம் அதிக சர்ச்சையாகி வருகின்றன. ஹேமா கமிட்டியில் வெளிவந்த தகவல்களின்படி மலையாள சினிமாவில் அதிகபட்சமாக இந்த பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கின்றன என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
10 முக்கிய பிரபலங்கள்
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில் தென்னிந்திய சினிமாவிலேயே தெலுங்கு தமிழை விடவும் மலையாளத்தில் அவ்வளவாக பாலியல் தொல்லைகள் கிடையாது என்று தன் பலரும் நினைத்து வந்தனர்.
ஆனால் மலையாளத்திலேயே இவ்வளவு அதிகமாக அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது என்றால் அப்பொழுது தமிழ் தெலுங்கின் நிலை என்னவாக இருக்கும் என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது.
இதற்கு நடுவே மலையாள பிரபலங்கள் பலரும் இப்படி பொத்தாம் பொதுவாக எல்லோரும் அட்ஜஸ்ட்மெண்டிற்கு செல்கிறார்கள் என்று கூறுவது சரி கிடையாது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் இன்னொரு தகவலும் இருக்கிறது.
அது என்னவென்றால் மலையாள சினிமாவில் இருக்கின்ற முக்கியமான பத்து நடிகர்கள்தான் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளுக்கு முக்கிய மூல காரணமாக இருக்கின்றனர். அவர்கள் தான் இது எல்லாவற்றிற்கும் தலைமையாக இருக்கின்றனர் என்று கூறுகிறது அந்த கமிட்டி. இதனை அடுத்து இது இன்னும் எவ்வளவு சர்ச்சையாக செல்ல போகிறது என்பது பலருக்கும் எதிர்பார்ப்பை தூண்டும் விஷயமாக இருக்கிறது.