அனைவரின் முன்பும் ரஜினியை அப்படி அழைத்த குஷ்பூ.. பதறிப்போன பிரபு..! பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பல நடிகைகள் பிற மொழிகளில் இருந்து வந்தவர்கள்தான். குறிப்பாக குஷ்பு, நக்மா, ஜோதிகா போன்றவர்கள் மும்பையில் இருந்து இறக்குமதி ஆனவர்கள்தான்.

அதே போல் மீனா, சினேகா, ரோஜா, கவுதமி போன்றவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். நதியா, ரேவதி, நயன்தாரா, மீரா ஜாஸ்மின், கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் மலையாள தேசம் கேரளாவில் இருந்து தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கியவர்கள்தான்.

குஷ்பு

நடிகை குஷ்பு, இந்தியில் சில படங்களில் நடித்து பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். 1980களின் இறுதியில் தர்மத்தின் தலைவன் படத்தில்தான் குஷ்பு அறிமுகமானார்.

தொடர்ந்து வருஷம் 16, கிழக்கு வாசல், பாண்டித்துரை, சின்னதம்பி, மைடியர் மார்தாண்டன், பாண்டியன், மன்னன், சிங்காரவேலன், பிரம்மா, ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை என குஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்.

தர்மத்தின் தலைவன்

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில், தர்மத்தின் தலைவன் ஷூட்டிங்கில் இருந்த போதுதான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அங்கிருந்த படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த சிலர், தமிழ் தெரியாத குஷ்புவிடம் குட்மார்னிங் என்பதற்கு வாடா என்றும், குட்நைட் சொல்வதற்கு போடா என்றும் சொல்ல வேண்டும் விளையாட்டாக கூறியிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: ஏற்கனவே 2 பொண்டாட்டி.. 3 வதாக ஸ்ரீபிரியா பின்னால் சுற்றிய பிரபல நடிகர்..!

ரஜினியை பார்த்து வாடா

அந்த சூழலில், காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வேகமாக வந்த ரஜினியை பார்த்து, குஷ்பு வாடா என்று கூறியிருக்கிறார். ரஜினி அதை பெரிதாக பொருட்படுத்தாமல் சிரித்தபடி போய் விட்டார்.

ஆனால் அருகில் இருந்து இதை பார்த்து நடிகர் பிரபு விட்டார். ரஜினியை பார்த்து வாடா என்கிறாரே இந்த புதுமுக நடிகை என்று அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

ஏனெனில் அப்போதே ரஜினி புகழின் உச்சியில் ரஜினிகாந்த் இருந்தார். அதன்பிறகு குஷ்புவிடம் எதற்காக வாடா என்று அழைத்தீர்கள் என்று ஆங்கிலத்தில் பிரபு விசாரித்த போதுதான், குஷ்புவை யாரோ ஏமாற்றிய உண்மை தெரிய வந்திருக்கிறது.

தமிழ் தெரியாது

அவருக்கு தமிழ் தெரியாது என்ற நிலையில் இந்த தவறு நடந்துள்ளதை புரிந்துக்கொண்ட பிரபு, குஷ்புவுக்கு அவ்வப்போது தமிழ் வார்த்தைகளை சொல்லி அதற்கான அர்த்தங்களை கற்றுக் கொடுத்து இருக்கிறார். குஷ்புவுக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுத் தந்ததும் பிரபுதான் என, குஷ்பு சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என்னால Bed லாம் Share பண்ண முடியாது.. நடிகை குட்டி பத்மினி ஓப்பன் டாக்…!

அனைவரின் முன்பும் ரஜினியை வாடா என்று அழைத்த குஷ்பூவை பார்த்து பதறிப்போனார் பிரபு. ஆனால் தமிழ் தெரியாத நிலையில் அவர் அப்படி அழைத்தது பலரும் அறியாத ரகசியமாக இருந்தது. ஆனால் இப்போது தமிழில் நன்றாகவே பேசுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version