இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் இருக்கும் அனைத்து நபர்களும் வீட்டு பராமரிப்பில் ஈடுபட்டால் தான் வீடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் வீட்டு பராமரிப்பில் குழந்தைகளின் பங்கு மிகவும் அவசியம். அப்படி அந்த குழந்தைகளை வீட்டு பராமரிப்பில் நீங்கள் ஈடுபடுத்தும் போது தான் எதிர்காலத்தில் அவர்கள் மிகச் சிறப்பாக வீட்டை பராமரிக்க அது உதவி செய்யும்.
குழந்தை தொழிலாளர்களே வேண்டாம் என்று கூறும் நாம் சின்ன சின்ன செயல்களை செய்வதின் மூலம் குழந்தைகளை செய்ய வைப்பது மூலம் அவர்கள் எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்கள் காரியங்களை அவர்களே செய்யக்கூடிய தன்னம்பிக்கையை தூண்டக்கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களும் வீட்டை பராமரிக்க உதவியது போல இருக்கும்.
வீட்டு பராமரிப்பில் குழந்தைகள்
குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் மெத்தை தலையணை ஆகியவற்றை சரி செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவும் ஒரு வகையான உடற்பயிற்சி என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டால் எப்பொழுதுமே அதை சரி செய்வார்கள்.
மேலும் குழந்தைகள் விளையாடி போட்ட பொருள்கள் படித்து விட்டு வைத்திருக்கும் புத்தகங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களையே வைக்க பழக்கங்கள் இதை தவறாமல் செய்யும்போது அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவியுங்கள்.
தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு ரிமோட்டை அந்த இடத்தில் வைத்திருக்கிறார்களா? மொபைல் சார்ஜரை கரெக்ட்டாக பயன்படுத்தி இருக்கிறார்களா? அந்த சார்ஜர் மற்றும் மொபைல் சார்ஜ் ஆனவுடன் எடுத்து தனியாக வைத்தல் போன்றவற்றை கற்றுக் கொடுப்பதன் மூலம் அந்தப் பகுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
குளித்து முடித்தவுடன் அழுக்குத் துணிகளை அவர்களையே கொண்டு வாஷிங் மெஷினில் போடச் சொல்லுங்கள். வீட்டில் விடுமுறையில் இருக்கும் போது பெருக்கச் சொல்லலாம். ஒட்டடை அடிக்க சொல்லலாம்.
அவர்கள் பொருட்களை துடைத்து வைக்க சொல்லலாம். அதுபோலவே வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள் அந்தந்த இடங்களில் இருக்கிறதா என்பதை அவர்களை கண்காணிக்க சொல்லுங்கள்.
அப்படி கண்காணிக்கும் பொழுது அந்த பொருள் இல்லை என்றால் உடனே அவர்கள் கேள்வியை எழுப்ப தயங்க மாட்டார்கள். இதன் மூலம் அவர்களது ஞாபக சக்திக்கு நாம் தீனி போடலாம்.