கில்லி திரிஷா கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது.. இதனால் வேணாம்ன்னு சொன்னேன்.. நடிகை கிரண் வேதனை..!

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கில்லி. இந்த படத்தை இயக்குனர் தரணி டைரக்ட் செய்தார். கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்த படம் வெளிவந்தது.

கபடி வீரராக விஜய்

இந்த படத்தில் விஜய் கபடி வீரராக நடித்திருந்தார். அவரது தந்தையாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் ஆஷிஷ் வித்யார்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா, வில்லனாக பிரகாஷ்ராஜ், விஜயின் நண்பர்களாக தாமு, நாகேந்திர பிரசாத், மயில்சாமி மற்றும் பாண்டு உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். விஜய்க்கு இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

தனலட்சுமியாக திரிஷா

மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கபடி போட்டியில் விளையாடச் சென்ற இடத்தில், கதாநாயகி தனலட்சுமியை காப்பாற்று வரும் வேலு கேரக்டரில் ஒரு ஆக்ரோஷமான நடிப்பை விஜய் வெளிப்படுத்தி இருந்தார்.

துடிப்பான நடிப்பில்…

விஜயின் துடிப்பான நடிப்பில், அதிரடி ஆக்சன் படத்தை ரசிகர்களுக்கு தந்து அவர்களை சந்தோசப்படுத்தி இருந்தார் டைரக்டர் தரணி. இந்த படம் அப்போதே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

கடந்த 20ஆம் தேதி கில்லி படம் வெளியான நிலையில் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் கடந்த இரு தினங்களில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் அரங்கு நிறைந்த காட்சிகள்

தொடர்ந்து பல பகுதிகளில், மீண்டும் கில்லி படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக சக்கை போடு போட்டு வருகிறது.

நடிகை கிரண்

இந்நிலையில், கில்லி படம் குறித்து ஜெமினி படத்தில் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் கூறியதாவது, கில்லி படத்தில் திரிஷா நடித்த தனலட்சுமி கேரக்டரில் நான்தான் நடித்திருக்க வேண்டும். எனக்குதான் அந்த கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு முதலில் வந்தது.

நடிக்க முடியாது

ஆனால் நான் அப்போது காதலித்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை பார்த்து பிறகு, இந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டோமே என்று மிகவும் வேதனைப்பட்டேன்.

நான் அப்போது எடுத்தது மிகப்பெரிய தவறான முடிவு என்பதை தெரிந்து மிகவும் வருத்தப்பட்டேன். சினிமாவில் இளம் கதாநாயகிகள் காதலிக்க கூடாது. கனவை அடைவதுதான் லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

காதலில் ஜெயிப்பது முக்கியமல்ல, வாழ்க்கையில் ஜெயிப்பது தான் முக்கியம் என்று நடிகை கிரண் பழைய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

திரிஷா கேரக்டரில்

அப்போது கிரண் சொன்ன இந்த விஷயம். தற்போது கில்லி படம் ரி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது இந்த பேட்டி மீண்டும் வைரலாகி வருகிறது.

கில்லி திரிஷா கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் காதலித்துக் கொண்டிருந்ததால் வேணாம்ன்னு சொன்னேன் என்று நடிகை கிரண் வேதனை தெரிவித்திருந்தாலும், நீங்கள் நடிக்காததுதான் கில்லி படத்துக்கு நல்லது என்று ரசிகர்கள் பலரும் கலாய்த்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version