“கிச்சன் டவல் செம அழுக்கா..!” – No Problem ஈசியா இப்படி சுத்தம் செய்யுங்க..!

சமையல் கட்டு, சமையல் அறை மேடையை சுத்தம் செய்யவும் சூடாக இருக்கக்கூடிய பொருட்களை எளிதாக இறக்கி வைக்கவும் நாம் தனியாக டவல்களை பயன்படுத்துகிறோம். இந்த டவல்களில் அதிக அளவு அழுக்கு மற்றும் மெழுகு பிசுக்குகள் படிந்து இருக்கும்.

அப்படிப்பட்ட கிச்சன் டவல்களை சுத்தப்படுத்துவது என்றாலே நாம் டென்ஷனாகி விடுவோம். இந்த பிசுக்கை எப்படி நீக்குவது என்று தெரியாமல் விழிப்போம்.

எனவே அந்த கிச்சன் டவலை எளிதாக சுத்தப்படுத்தக்கூடிய அருமையான வீட்டு குறிப்புகளை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கிச்சன் டவல்களை சுத்தம் செய்யக்கூடிய முறை

கிச்சனில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய டவலை எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. இரண்டு அல்லது மூன்று டவல்களை வைத்து இருந்தால் நீங்கள் சுத்தப்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.

குறிப்பாக சமையலறை மேடையில் தண்ணீர் எடுக்கும் போது தண்ணீர் கொட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படி தண்ணீர் கொட்டும் போது அதை துடைப்பதற்கு என்று தனியாக டவல்களை நீங்கள் பயன்படுத்தும் போது அந்த டவலில் எண்ணெய் பிசுக்கு ஏற்படாது. இதன் மூலம் எளிதில் சுத்தப்படுத்தி விடலாம்.

அடுப்பின் மேல் பகுதியை நீங்கள் சுத்தப்படுத்தும் போது எண்ணெய் பிசுக்கு கட்டாயமாக ஏற்படும். எனவே அதற்கு என்று ஒரு டவலை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அந்த டவலை நீங்கள் ஈசியாக சுத்தம் செய்யலாம்.

எண்ணெய் பிசுக்கு நிறைந்திருக்கும் டவலை சுத்தம் செய்ய நீங்கள் கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர் அல்லது ஷாம்புவை போட்டு அரைமுடி எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளுங்கள்.

பிறகு அந்த டவல்களை அதில் போட்டு அப்படியே முக்கி ஒரு நிமிடம் வரை அடுப்பில் வைத்து விடுங்கள் அதனை அடுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இந்த தண்ணீர் குளிர்ந்த பிறகு நீங்கள் எடுத்து அதை எப்போதும் போல சோப்பு அல்லது பிரசை பயன்படுத்தி துவைத்துக் கொள்ளலாம்.

எனினும் நீங்கள் அப்படி துவைக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் இந்த துணியில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்கு முழுவதும் எலுமிச்சை சாறு துணையோடு வெளியேறி இருக்கும்.

எனவே நீங்கள் அந்த குளிர்ந்த பாத்திரத்தில் இருக்கும் டவல்களை எடுத்து வேறொரு நீரில் ஒரு முறை அலசி நன்கு பிழிந்து காய போட்டாலே போதுமானது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …