“அதுக்கு நடுவுல ஒரு ஷாட்.. செம்ம அடி விழுந்திருக்கும்..” என்னை மட்டும் அப்படி பண்ணாங்க.. ஆத்மிகா கதறல்..

நடிகை ஆத்மிகா கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் எம் ஓ பி வைணவ மகளிர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்த தான் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார்.

கல்லூரி நாட்களிலேயே நடிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வமானது இவரை சில குறும் படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

நடிகை ஆத்மிகா..

அந்த வகையில் நடிகை ஆத்மிகா முதல் முதலில் ஹிப்ஹாப் தமிழா படமான மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவர் நடித்திருந்த நடிப்பை பார்த்து பரவலாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை அடுத்து துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படமான நரகாசுரன் திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டில் காட்டேரி என்ற படத்தில் மூன்று பெண் முன்னணி வேடங்களில் நடித்திருக்க ஆத்மிகாவும் இந்த படத்தில் நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து கண்னை நம்பாதே, கோடியில் ஒருவன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ஆத்மிகாவிற்கு ஹிந்தி பேச தெரியாததால் தனுஷின் ரஞ்சனா, அட்ரங்கி ரே போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் அந்த அற்புதமான வாய்ப்பை இழந்திருக்கிறார்.

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை தற்போது இழந்திருக்கிறார். எனினும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

கோடியில் ஒருவன் பட அனுபவம்..

அந்த வகையில் கோடியில் ஒருவன் படத்தில் நடக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவத்தை தற்போதைய பேட்டி ஒன்று பகிர்ந்து இருக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் போது அருவிக்கு நடுவில் ஒரு ஷாட் எடுக்க வேண்டும் கொஞ்சம் ஸ்லீப் ஆகி விழுந்தாலும் கூட செம அடி விழுந்திருக்கும் அந்த மாதிரி லொகேஷன் இருந்தது.

அந்த லொகேஷனில் சூரிய வெளிச்சம் மங்கிக் கொண்டே போகின்ற சூழ்நிலையில் டக்குனு பண்ணுங்க.. டக்குனு பண்ணுங்க.. என்று பட குழுவினர்கள் எங்களை துரிதம் பண்ணுகிறார்கள்.

கடுமையான குளிர் உடலை வாட்ட கூடிய சமயத்தில் அங்கு இருந்த அனைத்து நபர்களும் மிகச்சிறப்பாக ஸ்வெட்டர் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனால் நான் மட்டும் குளிர் நடுங்கிக் கொண்டிருந்தேன் என்ற விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து கோடியில் ஒருவன் படத்தில் நடிக்கும் போது மறக்க முடியாத அனுபவமாக நடிகை ஆத்மிகா கூறிய விஷயம் பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இது போன்ற லொகேஷனில் படப்பிடிப்பு நடக்கும் போது எவ்வளவு சிரமமாக இருக்கும் இத்தனை சிரமங்களையும் கடந்து தான் ஒரு படமானது திரைக்கு வருகிறது ஆனால் அதைப் பற்றி எவ்வளவு எளிமையாக நாம் பேசி விடுகிறோம் என்று பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version