“அடிவயிற்றை குறைக்கும் கொள்ளு தோசை..!” – சூப்பர் டேஸ்டில் நீங்களும் சாப்பிடுங்க..!

நமது உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றக்கூடிய தன்மை கொள்ளுக்கு உள்ளது. எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் அடிவயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்புகளை குறைப்பதில் இந்த கொள்ளுக்கு பெரும் பங்கு உள்ளது.

horse gram dosa

இதனை நீங்கள் எளிமையாக காலை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மிக விரைவில் தேவையில்லாத கொழுப்புகளை குறைத்து விடலாம். அந்த வகையில் இன்று கொள்ளு தோசை எப்படி செய்வது என்று இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

கொள்ளு தோசை செய்ய தேவையான பொருட்கள்

1.இட்லி அரிசி ஒரு கப்

2.பச்சரிசி ஒரு கப்

3.வெந்தயம் அரை டீஸ்பூன்

4.கொள்ளு கால் கப்

5.துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்

6.காய்ந்த மிளகாய் ஐந்து

7.சோம்பு இரண்டு டீஸ்பூன்

8.உப்பு தேவையான அளவு

9.பெருங்காயம் 1/4 டீஸ்பூன்

10.நறுக்கிய வெங்காயம் ஒரு கப்

11.கொத்தமல்லி

12.சீரகம் அரை டீஸ்பூன்

horse gram dosa

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, வெந்தயம், கொள்ளு துவரம்பருப்பு இவற்றையெல்லாம் எடுத்து நன்கு கழுவி ஊறவைத்து கொள்ளவும்.

 பிறகு இவை அனைத்துமே குறைந்தது 5 மணி நேரம் ஊற வேண்டும். அப்படி ஐந்து மணி நேரம் ஊறிய பிறகு இந்த பொருட்களை நீங்கள் உங்கள் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். அப்படி அரைக்கும் போது நீங்கள் தேவையான அளவு உப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தூளை சேர்த்து அரைத்து விடுங்கள்.

இதனை அடுத்து நீங்கள் மாவினை ஒரு பௌலில் மாற்றிவிட்டு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்த பின் மாவை புளிக்க விட்டு விடுங்கள்.

horse gram dosa

மேலும் மாவு புளித்த பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு தோசை மாவை ஊற்றி தோசையை சுட்டு எடுத்தால் அருமையான கொள்ளு தோசை ரெடி. இதை சட்னி அல்லது சாம்பார் ஒரு சேர்த்து சாப்பிடலாம்.

மேற்கூறிய முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் கொள்ளு தோசையை வாரம் ஒரு முறை செய்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கொழுப்புக்களை எளிதில் கரைத்து விடலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …