டாப் நட்சத்திரம் செய்த வேலை.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்..! அட பாவத்த..!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக பெயர் எடுத்து வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நடிகர் புது படம் ஒன்றில் கமிட்டாகி இருந்தார்.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வந்த அந்த படத்தை இளம் இயக்குனர் ஒருவர் தயாரிப்பதாக இருந்தது.

இயக்குனரை அலையவிடும் டாப் ஹீரோ:

பின்னர் அவரது கதை சரியில்லை எனக் கூறி நிராகரிக்க பின்னர் வேறு ஒரு இயக்குனரை போட்டனர் அந்த இயக்குனரோ டாப் நடிகரின் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்ற ஆசையில் படம் எடுக்கவும் ஆர்வம் காட்ட

அவருக்கு ஆப்பு வைத்து விட்டார்கள் . ஆம் தயாரிப்பு நிறுவனத்திற்கும் அந்த டாப் நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த இயக்குனரின் கதி தான் இப்போ கந்தல் ஆகிவிட்டது.

டாப் நடிகருடன் சேர்ந்த வேலை பார்ப்பது சமீப காலமாக மிகப்பெரிய சவாலாக இருப்பது மட்டுமின்றி சாவு பயத்தையே இயக்குனர்களுக்கு கொடுத்து வருகிறதாம்.

எப்போ யாருக்கு என்ன ஆகும்? எப்போ மண்டை சூடாகும்? எந்த பிரச்சனையை நம் தலையில் கொண்டு வந்து போடுவார்கள் என்ற குழப்பத்திலேயே படம் எடுப்பதால்,

இயக்குனர்களுக்கு கிரியேட்டிவிட்டி தாட்ஸ் கூட இல்லாமல் போய் விடுகிறது என புலம்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த டாப் ஹீரோ பல ஆங்கில படங்களின் லிங்கை எடுத்துக்காட்ட,

சாவு பயத்தை கொடுத்து டாப் ஹீரோக்கள்:’

இதே போன்ற ஆக்ஷன் காட்சிகள் இதே போன்ற மாஸான காட்சிகளை வைத்து என்னை படம் எடுங்கள் என கூறி டார்ச்சர் செய்து வருகிறாராம்.

கதைக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாமல் நான் எப்படி இதை எடுப்பது என இயக்குனர் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தலையை பிச்சிக்கொள்கிறாராம்.

இருந்தாலும் அதையெல்லாம் வெளிக்காட்டி கொள்ளாமல் டாப் நடிகர் எப்படியாவது தன் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் ரொம்பவே அமைதி காத்து வருகிறாராம்.

தேர்தல் முடித்துவிட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்ற நடிகர் அத்தோடு டாட்டா காட்டிவிடுவார் போல என்ற அளவுக்கு இயக்குனருக்கு பயத்தை கொடுத்து விட்டாராம்.

தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல்:

தற்போது வரை சூட்டிங் ஸ்பாட்டுக்கே வர மறுக்கிறாராம் அந்த டாப் ஹீரோ. இந்த படத்தை முடிப்பதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகி அந்த படத்தில் நடித்து வருகிறாராம்.

இதனால் கடுப்பின் உச்சத்தில் அந்த இயக்குனர் இருந்து வருகிறாராம். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்டால் அந்த டாப் நடிகர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதல் தான் எனக் கூறுகிறது.

அதாவது அந்த தயாரிப்பு நிறுவனம் நட்சத்திர நடிகர் இரண்டு பேரின் படங்களை எடுத்து தயார் நிலையில் வைத்துள்ளது.

அந்த படத்தை ரிலீஸ் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து உங்கள் பணத்தை எடுக்கிறேன் எனக் கூறிவிட்டதாம்.

பழிவாங்கும் டாப் நடிகர்:

இதனால் இந்த நடிகருக்கு செம கோபம் ஆகிவிட்டதாம். அப்போ நான் உங்கள் லிஸ்ட்ல இல்லையா?

என்ன பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு அவங்க படத்தை ரிலீஸ் பண்ண பிறகு நான் பின்னால வந்து ரிலீஸ் பண்ணனுமா?

என்ற கோபத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கவே கூடாது என முடிவெடுத்துவிட்டாராம் அந்த டாப் ஹீரோ.

அதுமட்டுமில்லாமல் கால் சீட் தேதியை சரியாக திட்டமிடாததால் ஷூட்டிங் இழுத்து அடித்துக்கொண்டே போனதாம்.

இதனால் செம கடுப்பு ஆகிவிட்டாராம் இந்த டாப் நடிகர். இவர்களின் பிரச்சனைக்குள் இயக்குனர் மாட்டிக் கொண்டு என் வாழ்க்கை முடிந்து விடும் போலயே என தனது நெருங்கிய நண்பர் வட்டாரத்திடம் கூறி புலம்பி வருகிறாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version