38 வயதாகும் நடிகர் கலையரசன் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா என்ற படத்தில் குடிகாரனாக நடித்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி என்ற திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, நட்சத்திரங்கள் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம் என கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறா.ர்
இவர் நடிப்பில் வெற்றி பெற்ற படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அந்தப் படங்களில் எல்லாம் இவருடைய கதாபாத்திரம் படம் முடிவதற்குள் இறந்து விடுவது போன்ற காட்சி அமைப்புதான் இருக்கின்றது.
இதனை தொடர்ந்து #Stop_Killing_Kalaiyarasan_in_Movies என்ற ஹேஷ்டேக்கும் இணைய பக்கங்களில் ட்ரெண்டானது. சமீபத்தில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
உண்மைக்கு நெருக்கமான காட்சி அமைப்புகள், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மற்றும் கதையின் ஓட்டம் நடிகர்களின் நடிப்பு என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
இந்த படத்தில் நடிகர் கலையரசனின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனால், படம் முடியும் தருவாயில் அவருடைய கதாபாத்திரம் இறந்து விடுகிறது..
இதனை பார்த்து ரசிகர்கள் என்ன பெரிய ஏழு உயிர் கொண்ட அண்டர்டேக்கரு.. கலையரசன் தெரியுமா..? என்று பங்கமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வரும் காலங்களில் தமிழ் சினிமாவின் அண்டர்டேக்கரே என்று போஸ்டர் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போல.