“கொங்குநாட்டு ஸ்டைலில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு..!” – ஒரு பிடி பிடிக்கலாமா..!

இரண்டு நாட்கள் வரை சுண்ட வைத்து இந்த கொங்குநாட்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சாப்பிடும் போது சுவை கூடுதலாக இருக்கும். குறிப்பாக வெள்ளை சாதத்துடன் இதை கலந்து சாப்பிடும் போது ஒரு பிடி பிடிக்கலாம் என்ற எண்ணமே மேலோங்கும்.

மேலும் இந்த குழம்பை இட்லி, தோசை என்று எதனுடன் வேண்டுமென்றாலும் சேர்த்து சாப்பிடுவதின் மூலம் சுவை கூடுதலாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட சுவையான கொங்கு நாட்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்கலாம்.

கொங்குநாட்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

1.சிறிய பிஞ்சு கத்திரிக்காய் 10

2.100 மில்லி நல்லெண்ணெய்

3.வெந்தயம் ஒரு சிட்டிகை 4.கடுகு ஒரு டேபிள் ஸ்பூன்

5.உரித்த சின்ன வெங்காயம் 20

6.கொத்தமல்லி ஒரு டீஸ்பூன்

7.சீரகம் அரை டீஸ்பூன்

8.தக்காளி 4

9.வர மிளகாய் 4 10.மஞ்சத்தூள் சிறிதளவு 11.தேங்காய் துருவல் கால் கப்

12.புளி சுண்டைக்காய் அளவு

13.உப்பு தேவையான அளவு

14.கருவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை

முதலில் கத்திரிக்காயை நான்காக வகுந்து அதில் சொத்தை இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டு கழிநீரில் வெட்டி போட்டு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் 100 மில்லி அளவு நல்லெண்ணையை ஊற்றி அதில் இந்த பிஞ்சு கத்திரிக்காய்களை போட்டு சிறிதளவு உப்பை தூவி நன்கு வதக்க வேண்டும்.

நீர் சேர்க்காமல் இந்த கத்திரிக்காய் வதங்கி இருக்கக்கூடிய வேளையில் நீங்கள் அடுப்பில் இன்னொரு புறம் மற்றொரு கடாயை வைத்து அதில் சிறிதளவு சூடான இந்த எண்ணையை எடுத்து ஊற்றிக் கொள்ளுங்கள்.

பிறகு இதில் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, வரமிளகாய் தக்காளி அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு வதக்கிய இந்த கலவை நன்கு வதங்கிய பிறகு அடுப்பை ஆப் செய்து விட்டு சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.

இப்போது உங்கள் கத்திரிக்காய் நன்கு சுண்டி வதங்கி இருக்கும் இதனோடு எடுத்து வைத்திருக்கும் புளியை நன்கு கரைத்து அந்த  நீரை இந்த கத்திரிக்காயில் அப்படியே ஊற்றி விடுங்கள். உடன் சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொண்டு மஞ்சத்தூளையும் போட்டு விடுங்கள்.

இதனை அடுத்து ஆறுவதற்காக எடுத்து வைத்திருக்கும் பொருட்கள் ஆறிய நிலையில் இருக்கும்போதே நீங்கள் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த கலவையை நீங்கள் புலியோடு வெந்து கொண்டிருக்கும் கத்திரிக்காயில் ஊற்றி தேவையான அளவு நீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

உப்பு தேவையா என்பதை சுவைத்து பார்த்து தெரிந்து கொண்டு தேவை எனில் அதற்கு ஏற்ப போட்டு விடுங்கள். இரண்டு மூன்று கொதி வந்த பிறகு குழம்பில் இருந்து நல்லெண்ணெய் பிரிந்து வெளியே வரும். அந்த சமயத்தில் அடுப்பை ஆப் செய்து விட்டு எடுத்து வைத்திருக்கும் கருவேப்பிலையை கிள்ளி அதன் மேல் போட்டு விடுங்கள். இப்போது சூடான சுவையான கொங்கு நாட்டு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …