“கொங்கு நாட்டு மாலை லைட் ஸ்னேக் புளி வடை …!” – செய்வது எப்படி என தெரியுமா?

 மரியாதைக்கு பஞ்சம் இல்லாத கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்களை கொங்கு நாட்டு மக்கள் என்று அனைவரும் அன்போடு அழைப்பார்கள். அப்படிப்பட்ட கொங்கு நாட்டு மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற உணவு பண்டம் தான் இந்த புளி வடை.

அதுவும் மாலை மயங்கும் நேரத்தில் புளி வடை செய்தால் எத்தனை வடைகள் உள்ளே சென்றது என்று தெரியாமல் அனைவரும் ஒரு பிடி பிடிப்பார்கள். அப்படிப்பட்ட உடலுக்கு ஆரோக்கியமான புளி வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாமா.

புளி வடை செய்ய தேவையான பொருட்கள்

1.துவரம் பருப்பு 150 கிராம்

2.200 கிராம் புழுங்கல் அரிசி

3.50 கிராம் பச்சரிசி

4.சின்ன வெங்காயம் ஒரு கப்

5.கருவேப்பிலை ஒரு கொத்து

6.பெருங்காயம்

7.நெல்லிக்காய் அளவு புளி

8.வரமிளகாய் நான்கு

9.உப்பு

10.முற்றிய தேங்காய் துருவல் ஒரு கப்

11 . சிறிதளவு சீரகம்

12.எண்ணெய் அரை லிட்டர்

செய்முறை

துவரம் பருப்பு, புழுங்கல் அரிசி, பச்சரிசி போன்றவற்றை குறைந்தது 3:00 மணி நேரம் நன்கு ஊற விடுங்கள். ஊறிய பின்பு நன்றாக சுத்தம் செய்து நீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து இந்த மூன்று பொருட்களையும் உங்கள் மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு அரைக்கக்கூடிய வேளையில் நீங்கள் வர மிளகாய் சீரகம், கருவேப்பிலை, தேங்காய் துருவல், வெங்காயம் போன்றவற்றையும் சேர்த்து அரையுங்கள்.

இது நன்றாக அரைத்து விட்ட பிறகு நெல்லிக்காய் அளவு இருக்கும் புளியையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் மிகவும் நைசாக அரைக்க வேண்டாம். மாவு அரைக்கப்பட்ட பின்பு அதை ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.

 இப்போது வானிலையில் எண்ணையை ஊற்றி அடுப்பை ஆன் செய்து கொள்ளவும். எண்ணெய் சூடாகிய பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து வடை வடிவத்தில் தட்டி போட்டு பொன் நிறம் வந்தவுடன் எடுக்க வேண்டும்.

 இந்த வடை நீங்கள் சரியான பதத்தில் அரைத்திருந்தால் நன்கு போல்லி, பூரி போல உப்பி மேலே வரும் இப்போது சூடான சுவையான மொறு மொறு புளிவடை தயார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …