தங்கலானை தூக்கி விழுங்கிய டிமான்ட்டி காலனி 2.. வாழை, கொட்டு காளி படங்களில் நிலை?

தமிழில் தற்போது திரையரங்குகளை நோக்கி புதிய படங்கள் வேகமாக வெளிவருவதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா, அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 என மூன்று படங்கள் வெளி வந்தது.

இதில் படம் வெளி வந்த முதல் நாளே கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளி வந்த ரகு தாத்தா திரைப்படம் ஊதிக்கொண்டது. இதனை அடுத்து வசூலில் தங்கலான் மற்றும் டிமான்ட்டி காலனி 2 படங்கள் சாதனை புரிந்தது.

தங்கலானை விழுங்கிய டிமான்ட்டி காலனி..

இந்நிலையில் தங்கலான் திரைப்படமானது முதல் வாரத்திலேயே பல கோடி வசூலை வாரிக் குவிக்கும் என்று நினைத்த நிலையில் திங்கட்கிழமை முதல் ரசிகர்கள் இருந்த படத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டதை அடுத்து இரண்டாவது வாரத்தில் கண்டிப்பாக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து சுமார் 100 கோடி வரை வசூல் செய்யும் என்று நினைத்தார்கள்.

எனினும் சியான் விக்ரம் நடிப்பில் வெளி வந்த இந்த படத்தின் வசூல் முன்னேறாத நிலையில் தற்போது தங்கலான் படத்தை தூக்கி சாப்பிடக்கூடிய அளவு டிமான்ட்டி காலனி 2 படமானது வசூலை வாரி குவித்து வருகிறது.

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் முதல் நாளிலிருந்து வசூலில் கோட்டை கட்டி வருவதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது வாரத்திலும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால் மேலும் வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படமானது தமிழ்நாடு முழுவதும் 275 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் 350 தியேட்டர்களில் ஓடுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து 20 கோடிக்கு மேல் வசூலை பார்த்திருக்கும் இந்த படம் கடந்த 10 நாட்களில் அள்ளி உள்ள பணத்தை விட இந்த வாரம் அதிக அளவு அள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வாழை, கொட்டுகாளி படங்களில் நிலை?

இந்நிலையில் மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் வாழை படமும் சூரி நடிப்பில் வெளி வந்திருக்கும் கொட்டுக்காளி திரைப்படமும் 190 தியேட்டர்களில் மட்டும் வெளியாகி உள்ள நிலையில் வாழை படம் முதல் நாளிலேயே 1.5 கோடிக்கு மேலான வசூலை தட்டி தூக்கி உள்ளது.

இதனை அடுத்து இந்த திரைப்படமானது 240 தியேட்டர்களுக்கு மேல் அதிகளவு திரையிடப்பட போவதாக செய்திகள் வருவதை அடுத்து வாழை திரைப்படம் மேலும் அதிகமான வசூலை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

அது போலவே சூரி நடிப்பில் வெளிவந்திருக்கும் கொட்டுக்காளி திரைப்படமும் வசூலில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடிக்கும் என்று சொல்லப்பட்டு வரும் வேளையில் தங்கலான் சற்று மங்கி வசூலில் பின்னோக்கி செல்வதாக சொல்லலாம்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் முழுவதும் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. மேலும் அருள் நிதியின் திரைப்படமானது தங்கலானை விழுங்கி விட்டதா? என்று ரசிகர்கள் நக்கலாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version