ஒரே வார்த்தையில சொல்லிட்டேன்.. அந்த உறுப்பில் அடி வாங்கிய வடிவேலு.. முதன் முறையாக ரகசியம் உடைத்த கோவை சரளா..!

நடிகை மனோரமா ஆச்சிக்குப் பின் காமெடியில் கலக்கி ரசிகர்களின் மனதில் என்றும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் கோவை சரளா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இதுவரை இவர் சுமார் 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருதும் கிடைத்துள்ளது.

நடிகை கோவை சரளா..

நடிகை கோவை சரளா திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல தனியார் தொலைக்காட்சிகளிலும் குறிப்பாக சகலகலா சரளா, காமெடியில் கலக்குவது எப்படி, செல்லமே செல்லம் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவர் பேசிய சில வசனங்கள் இன்று வரை மிகவும் பிரபலமான வசனங்களாக மாறியதோடு மக்கள் மத்தியில் அடிக்கடி பேசக்கூடிய வசனமாகவும் மாறியுள்ளது. அதில் குறிப்பாக என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம் என்ற கரகாட்டக்காரன் வசனமும், என்ன காரைக்குடி பாட்டியில கூப்பிட்டாங்கோ, தஞ்சாவூர் பார்ட்டிகளை கூப்பிட்டாங்கோ, அங்கெல்லாம் போகாம கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன் என்ற வசனமும் மிகவும் ஃபேமஸான வசனமாக திகழ்ந்தது.

அதுமட்டுமல்லாமல் வடிவேலோடு இணைந்து தொற இங்கிலீஷெல்லாம் பேசுது என்ற வசனமும் சினேகிதனய்ய்.. சினேகிதனய்ய்.. ர்ர்ரகசிய.. சினேகிதனய்ய்.. என்ற வசனம் படு பேமஸ் ஆக மாறியது.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்த அனுபவம் பற்றி முதன்முறையாக ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார் நடிகை கோவை சரளா.

அந்த உறுப்பில் அடி வாங்கிய வடிவேலு..

வடிவேலுவும் கோவை சரளாவும் இணைந்து நடித்த காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் அதிக அளவு கோவை சரளா வடிவேலுவை அடிக்கக்கூடிய காட்சிகள் இடம் பெறும்.

ஒவ்வொரு முறையும் வடிவேலுவை அடித்து துவைத்தது சும்மா நொங்கு நொங்கு என புரட்டிப்போட்டு வடிவேலுவை தாக்கி தொங்க விடுவார். அப்படி ஒரு காட்சியில் நடிக்கும் போது வடிவேலுவின் வயிற்றில் சரியான அடி விழுந்து விட்டது.

இதனை அடுத்து அவர் என்னிடம் என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே என்ற வசனத்தை பேசியதோடு வலி கடுமையாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இந்த நிகழ்வு சற்றும் எதிர்பாராமல் நடந்தது என ஒரே வார்த்தையில் நான் கூறிவிட்டேன்.

இதனை அடுத்து அவர் இது போன்ற சண்டை காட்சிகளின் நடிக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக பக்குவமாக நடிக்க ஆரம்பித்தார். என்ன செய்வது அன்று அவர் குறுக்கே வந்ததால் தான் இந்த மாதிரி அடி அவர் மேல் விழுந்து விட்டது என்ற உண்மை ரகசியத்தை உடைத்த கோவை சரளாவின் பேச்சு தற்போது இணையத்தில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

இதனைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் இந்த பேச்சை ரசித்து வருவதோடு மட்டுமல்லாமல் நடிக்கும் போது இவை எல்லாம் ஏற்படுவது சகஜம் தானே, இதனால் உங்களுக்கு அவர் மேலோ, அவருக்கு உங்கள் மேலோ கட்டாயம் வருத்தம் இருக்காது என பதில் அளித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version