எந்நேரமும் புருஷனோட அதை பண்ண முடியுமா..? திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து கோவை சரளா தடாலடி..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமாகி எக்கச்சக்கமான திரைப்படங்களில் வெற்றி வாகை சூடியவர் நடிகை கோவை சரளா. பெரும்பாலும் காமெடி நடிகையாக நடிக்கும் நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகக்குறைவுதான்.

மனோரமா காலகட்டத்திலும் சிலர் மட்டும்தான் காமெடி செய்யும் நடிகைகளாக இருந்தனர். பெரும்பாலும் நாடக காலகட்டம் முதலே ஆண்கள்தான் அதிகமாக காமெடி செய்யும் நபர்களாக இருப்பார்கள். ஆனால் சினிமாவிற்கு வரும்பொழுது சில நடிகைகள் அதை மாற்றி அமைத்தனர்.

காமெடி நடிகை:

அந்த வரிசையில் வந்தவர்தான் நடிகை கோவை சரளா. 1979ல் வந்த வெள்ளி ரத்தினம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கோவை சரளா. தொடர்ந்து அப்போது பிரபலமாக இருந்த கவுண்டமணி செந்திலுடன் சேர்ந்து காமெடிகள் செய்து வந்தார்.

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இவரது காமெடிக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் ஜோடியாக இவர் நடித்திருக்கிறார். மிக தாமதமாகதான் வடிவேலுவுடன் ஜோடியாக நடிக்க தொடங்கினார் கோவை சரளா.

வடிவேலு சினிமாவில் பிரபலம் அடைய துவங்கிய பிறகு கவுண்டமணி செந்திலுக்கான வரவேற்பு என்பது சினிமாவில் குறைந்துவிட்டது. இருந்தாலும் கோவை சரளாவுக்கு மட்டும் அப்போது இருந்த வரவேற்பு குறையவில்லை.

வடிவேலுவுடன் வாய்ப்பு:

அவர் தொடர்ந்து வடிவேலுவுடனும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இப்போது வரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத ஒரு காமெடி நடிகையாக கோவை சரளா இருந்து வருகிறார். காமெடி என்பதையும் தாண்டி பல விஷயங்களை சிறப்பாக நடிக்க முடியும் என்பதை செம்பி திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார் கோவை சரளா.

இப்படி பன்முக திறமை கொண்டவர் என்றாலும் அதிகமாக காமெடி திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கோவை சரளா இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

எப்போதாவது திருமணம் செய்யவில்லை என வருத்தப்பட்டதுண்டா என அவரிடம் கேட்கபட்டது. அதற்கு பதில் அளித்த கோவை சரளா எல்லோருமே ஒரு காலத்தில் தனியாக வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

நாம் திருமணம் செய்து கொண்டால் மட்டும் நம்முடைய கணவர் நம்முடன் இருப்பார் என்று கூற முடியாது. அவர் விபத்தில் இறந்து போகலாம் அல்லது நம்மை விட்டுவிட்டு செல்லலாம். எனக்கு தெரிந்து திருமணம் ஆனவர்களிடமே ஏன் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்றுதான் நினைத்திருக்கிறேனே தவிர நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று இதுவரை வருத்தப்பட்டதே கிடையாது. என்று பதில் அளித்திருக்கிறார் கோவை சரளா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version