அப்பாவின் மரணத்திற்கு கூட போகாத கோவை சரளா..! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை கோவை சரளா. ஆச்சி மனோரமாவுக்கு பிறகு அடுத்த இடத்தை கோவை சரளா பிடித்திருந்தார்.

ஒரு காலகட்டம் வரை வெளியாகும் திரைப்படங்களில் கோவை சரளா இல்லாத படங்களை இல்லை என சொல்லும் அளவுக்கு இவர் லேடி வடிவேலுவாக ரவுண்டு கட்டி வலம் வந்து கொண்டிருந்தார்.

கோவை சரளா:

ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்பு மிகப் பிரமாதமாகவும், எதார்த்தமாகவும், அவ்வளவு காமெடி நிறைந்ததாகவும் நகைச்சுவையில் கலகலப்பாக சிரிக்க வைப்பதாகவும் இருக்கும்.

கோவை சரளா வந்தாலே மனசுக்கு இதமாக மாறிவிடும் என சொன்ன காலமெல்லாம் உண்டு. இவர் காமெடி மற்றும் துணை வேடங்களில் நடித்து பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வந்தார்.

தன்னுடைய 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில் இதுவரைக்கும் கோவை சரளா மட்டும் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் சாதனை படைத்திருக்கிறார்.

இவர் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான பல்வேறு விருதுகளை பெற்று சிறந்த நகைச்சுவை நடிகையாக பல்வேறு விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த பெண் நகைச்சுவைக்கான விருது ஆகியவற்றை இவர் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

லேடி வடிவேலு:

தமிழ் சினிமாவில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். குறிப்பாக வடிவேலு கோவை சரளாவின் காம்போ என்றாலே அதற்கு தனி மவுஸ் இருக்கும்.

அவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு காமெடியில் பின்னி படல எடுப்பார்கள். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஆரம்பித்தது இவரது திரைப்பயணம்.

தொடர்ந்து வைதேகி காத்திருந்தால், தம்பிக்கு எந்த ஊரு, சின்ன வீடு, லட்சுமி வந்தாச்சு, நான் சிகப்பு மனிதன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கோவை சரளா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காமெடி சரவெடியாக வலம் வந்த கோவை சரளா சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மே 3ம் தேதி கிடைக்க வெளியாகி ஓரளவுக்கு வசூலை பெற்றிருந்தது.

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்தே இப்படத்தில் தமன்னா, ராசி ,கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோ நடித்திருந்தார்கள்.

வாழ்வில் நடந்த மோசமான அனுபவம்:

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் கோவை சரளா.

அப்படி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தனது வாழ்வில் நடந்த மிக மோசமான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் பேசியதாவது… நான் கோயம்புத்தூரை சேர்ந்தவள் என்பதால்தான் எனக்கு கோவை சரளா என்று பெயர் வந்தது.

எனக்கு மொத்தம் நான்கு சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருக்காங்க. எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

நான் திட்டவட்டமாக தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். எனக்கு கல்யாணமே ஆகல என்னுடைய வாழ்வில் நடந்த மோசமான விஷயம் எது அப்படின்னு கேட்டீங்கன்னா…என்னுடைய தந்தையின் இறப்பு தான்.

அதை என்னால இன்று வரைக்கும் மறக்கவே முடியவில்லை. ஏனென்றால் கடைசியாக கூட என்னுடைய தந்தையை என்னால பார்க்கவே முடியல.

காரணம் என்னோட நடிப்பு தொழிலிலே நான் பிஸியாக இருந்துவிட்டேன். ஒருமுறை நான் ஷூட்டிங் காக ஊட்டிக்கு போயிருந்தேன்.

அப்போ தான் என்னோட அப்பா இறந்த செய்தி எனக்கு வந்துச்சு. ஆனால் அந்த சமயத்துல என்னால் அந்த ஷூட்டிங்கில் இருந்து வெளியேறி என்னோட அப்பா இறப்புக்கு கூட என்னால போக முடியல.

காரணம் அது ரொம்ப சின்ன பட்ஜெட் தயாரிப்பு நிறுவனம். ஒரு வேலை நான் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டால் அவங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிடும்.

அதனால் என்னால அந்த படத்தோட ஷூட்டிங்ளிருந்து போக முடியல. அந்த காரணத்தால என்னோட தந்தையோட இறப்புக்கு நான் போகவில்லை.

செத்த அப்பாவை கூட பார்க்க வரல:

ஆனால் அங்கு இருந்து எல்லாருமே என வேற மாதிரி தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க பணமும் புகழும் தான் கோவை சரளாவுக்கு முக்கியம்.

அதனால தான் பெத்த தந்தைக்கு கூட கடை தகனம் செய்ய வரல. எது என்னை மோசமாக சித்தரித்து பேசினார்கள்.

அது எனக்கு மிகுந்த மன வேதனை கொடுத்தது. இன்று வரை எனது தந்தையின் இழப்பை பார்க்க முடியவில்லை என்ற வேதனை எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது.

என்று கோவை சரளா மிகவும் எமோஷ்னலாக வருத்தப்பட்டு கூறினார். நட்சத்திர காமெடி நடிகையாக எல்லோரையும் கலகலவென சிரிக்க வைக்கும் கோவை சரளாவின் வாழ்க்கையில் இவ்வளவு மோசமான சம்பவங்கள் நடந்துள்ளதா என பலரும் வருத்தப்பட்டு கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version