கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக புகார்.. KPY பாலா கொடுத்த பதிலை பாருங்க..

இந்தியாவில் எண்ணற்ற ஊழல்கள் நடந்துள்ளது. அதற்கு உதாரணமாக ஹவாலா ஊழலை பற்றி சொல்லலாம். அந்த வகையில் தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமான KPY பாலா, தான் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவில்லை என்ற விஷயத்தை வருத்தத்தோடு பகிர்ந்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பாலா ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட நிலையில் குக் வித் கோமாரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரைப்பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.

KPY பாலா..

இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டும் பாலாவை கலியுக கர்ணன் என்று பல ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனோபாவத்தில் இருக்கும் இவரிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் முடிந்த வரை உதவி செய்வதால் வள்ளல் பாலா என்றும் பலர் அழைக்கிறார்கள்.

இவர் அண்மையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நடிகர் விக்கி சிவாவுடன் இணைந்து பல நடிகர்களின் குரல்களில் பேசி நடனம் ஆடி மாணவர்களை மகிழ்வித்தார்.

கருப்பு பணத்தை வெள்ளையா மாத்துறனா..

இதனை அடுத்து பாலா செய்தியாளர்களிடம் பேசிய போது நான் சம்பாதிக்கக் கூடிய பணத்தில் இருந்து மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். எனினும் என் பின் யாரோ இருக்கிறார்கள் என்று பலரும் பல வகைகளில் பேசி வருகிறார்கள்.

நான் இந்த நிலைமையை எட்டிப் பிடிப்பதற்கு முன்பு பட்ட கஷ்டங்கள், வலிகள், வேதனைகளை வார்த்தையால் சொல்லி விட முடியாது. இதை தாண்ட என் கூட இருந்தவர் நடிகர் லாரன்ஸ் அண்ணா தான். அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று பாலா கூறினார்.

மேலும் அண்மையில் ஒரு வீடியோவில் யாருடைய கருப்பு பணத்தையோ நான் வெள்ளை பணமாக மாற்றுவதாக சொல்லி இருந்தார்கள். எனக்கு அந்த அவசியம் இல்லை. வெயில் நின்று உழைத்து நான் கருத்த பணத்தை தான் மற்றவர்களுக்கு உதவியாக தருகிறேன் என உருக்கமாக கூறியிருந்தார்.

புகாருக்கு பதில் கொடுத்த பாலா..

இதற்கு முன்பு மூன்று வேளை உணவிற்கே வழியில்லாமல் திண்டாடிய சமயத்தில் நான் பட்ட கஷ்டங்கள் யாரும் படக்கூடாது என்ற ரீதியில் தான் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் பாலா கருப்பு பணத்தை வெள்ளையாக்கவில்லை என்பதை தெளிவாக இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்.

எனவே இவரைப் போல உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இருக்கும் இளைஞர்கள் நோகும் படி இது போன்ற வார்த்தைகளை சொல்லி பேசி வருத்தப்பட வைப்பதை விட அவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய வகையில் பேசி சமுதாயத்துக்கு நன்மைகளை தரக்கூடிய வகையில் செயல் பட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

எனவே இனி வரும் காலங்களில் ஆவது இது போன்ற அவதூறு சொற்களை பரப்பாமல் முடிந்த வரை பாலா செய்யக்கூடிய சமூகப் பணிக்கு உதவ முடியவில்லை என்றாலும் அவரது மனம் நோகும் படி நடக்காமல் இருப்பது நல்லது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version