KPY பாலா காதலிப்பது இந்த சீரியல் நடிகையையா…? குவியும் வாழ்த்துக்கள்..!

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை போலவே விஜய் டிவி அமைத்துக் கொடுக்கும் பிளாட்பார்மில் கலக்கி வரும் நபர்களில் ஒருவர் KPY பாலா இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.

அது மட்டுமல்லாமல் கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படும் கேபிஒய் பாலா பொதுமக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்து வருவதோடு மக்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கக் கூடிய அற்புத மனிதராக விளங்குகிறார்.

கே பி ஒய் பாலா..

பாலாவை பொறுத்த வரை விஜய் டிவியில் ஆரம்பத்தில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களின் பங்கேற்க கூடிய திறமையான நபர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் இவரும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை கஷ்டப்படும் மக்களுக்காக ஒதுக்கி அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கக் கூடிய கே பி ஒய் பாலா பெண்களுக்கான ஆட்டோ, வாகன வசதி இல்லாத ஊருக்கு ஆம்புலன்ஸ், விவசாயிகளுக்கு என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

காதலிப்பது இந்த சீரியல் நடிகையா?

மேலும் தற்போது இவர் காதல் வலையில் விழுந்திருக்கிறார். இந்த காதல் எப்போது வரும் எப்படி வரும் என்று தெரியாத நிலையில் இவர் சீரியல் நடிகை ஒருவரை காதலித்து வருவதாக அண்மையில் வீடியோ செய்து கொண்டு வெளி வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

அந்த வகையில் இவர் காதலிக்க கூடிய சீரியல் நடிகை யார் என தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். இந்த சீரியல் நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் முத்தழகுவாக நடித்து பாலாவைப் போலவே ரசிகர்களை கவர்ந்தவர்.

அந்த சீரியல் நடிகை ஷோபனாவை தான் காதலிப்பதாக பாலா கூறியதை அடுத்து மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கும் ரசிகர் வட்டாரம் பாலாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

குவியும் வாழ்த்துக்கள்..

எப்படி ரசிகர்களின் மத்தியில் பாலாவிற்கு குவியும் வாழ்த்துக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பெண் வீட்டில் பாலாவுக்கு கிடைக்கும் வருமானத்தை முழுவதுமே உதவிகளை செய்து விடுவதால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் பாலா தற்போது ஷோபனாவிடம் நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை என் வாழ்க்கை முழுவதும் நன்றாக பார்த்துக் கொள்வேன். நான் திருமணம் செய்து கொண்ட பிறகு என்னுடைய அம்மா என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்ள மாட்டேன்.

அது போல நீ எங்க அம்மாவை பற்றி என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் நடுநிலையை கையாளுவேன்.

அதுமட்டுமல்லாமல் உன்னுடைய கனவுகளுக்கு நான் துணையாக எப்போதும் இருப்பேன். என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தருகிறாயா? நீ அப்படி சம்மதம் தெரிவித்தால் திருமணத்திற்கு உரிய இன்விடேஷனை அடிக்கச் சொல்லிவிடலாம்.

அதே நேரத்தில் தனியார் சேனலில் நம்முடைய திருமண வீடியோவை விற்றால் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அந்த சேனல் நம் திருமணத்தில் பந்தி பரிமாறுவது முதல் கிடா வெட்டுவது வரை எல்லாவற்றையும் வீடியோவாக எடுத்து வெளியிடுவார்கள் என ரோபோ ஷங்கரை மறைமுகமாக தாக்கி பேசினார்.

இதனை அடுத்து இதற்கு முதலில் சம்மதம் தராமல் இருந்த சோபா கடைசியில் உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தன்னுடைய காதலை பாலாவின் கையில் இருந்த ரோஜை பிடிங்கி அவருக்கே கொடுத்து தெரிவித்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பாலா தன்னுடைய காதலை அற்புதமான முறையில் நடிகையிடம் வெளிப்படுத்தி பேசி இருப்பதை பார்த்து உண்மையாகவே பாலா காதலித்தது அந்த நடிகை தானா? இல்லை நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக இப்படி பேசினாரா? என்ற குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version