எனக்கு இதை குடுக்கும் பெண்ணை நான் திருமணம் செய்ய ரெடி.. KPY பாலா விசித்திர கண்டிஷன்..!

விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை திறமை இருப்பவர்களை எப்போதும் கைவிடாமல் அவர்களின் திறமையை உலகிற்கு வெளிகாட்டி மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிடும்.

விஜய் டிவி வாசலில் சென்று விட்டாலே திறமை இருப்பவர்கள் ஜெயித்து விடலாம் எப்படியாவது உள்ளே மட்டும் நுழைந்து விட்டால் போதும் என பல கனவோடு வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து விஜய் டிவியின் வாசலில் காத்து கிடக்கும் பல திறமைசாலிகளை பார்க்கத்தான் முடிகிறது.

விஜய் டிவி கொடுத்த வாழ்க்கை:

அப்படி வந்தவர் தான் கே பி ஒய் பாலா இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.

அவருக்கு திரைப்படத்திலிருந்து வாய்ப்புகள் கிடைக்க விஜய் சேதுபதியின் ஜூங்கா திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானார்.

அவ்வப்போது சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் காணப்படுவது உண்டு. அதுமட்டுமில்லாமல் செலபிரிட்டிஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்ளில் போன் கால் மூலமாக அவர்களை கலாய்ப்பது பிராங்க் செய்வது உள்ளிட்டவற்றை செய்து மக்கள் இடையே பிரபலமாக இருந்து வந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். பாலா மிகச்சிறந்த திறமைசாலி என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நிரூபித்து காட்டி வருகிறார்.

ஆம் சமீபத்தில் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளை செய்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

KPY பாலாவின் உதவிகள் :

வீடு வீடாக சென்று பணஉதவிகளையும் அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் வழங்கி தண்ணீரில் இறங்கி நடந்து சென்று சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது.

அது மட்டும் இல்லாமல் ஊனமுற்றவர்களுக்கு வாகனம் வழங்குதல் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து மருத்துவ உதவி செய்வது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை kpy பாலா செய்து வருகிறார்.

2023ல் ஈரோடு அருகே கடம்பூர் மலைவாழ் மக்களுக்காக பாலா ஆம்புலன்ஸ் வாங்கினார். முன்னதாக, தனது பிறந்தநாளில், முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாலா கலக்கப்போவது யாரு சூப்பர் சிங்கர், கோமாளியுடன் குக்கூ , முரட்டு சிங்கிள், சூப்பர் சிங்கர், திரு மற்றும் திருமதி சின்னத்திரை, நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி, ஊ சொல்றியா ஓஓஓம் சொல்றியா, கலக்கப்போவது யாரு சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றிருக்கிறார்.

இத்திரைப்படம் என எடுத்துக்கொண்டால் ஜூங்கா, தும்பா, சிக்சர் , காக்டெய்ல், புலிக்குட்டி பாண்டி , லாபம், நாய் சேகர் , நாய் சேகர் ரிட்டர்ன் , ரன் பேபி ரன்,தில்லு இருந்தா போதாது, ரா ரா சரக்கு ரா ரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் கடந்த 2022 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே வருகிறார்.

சமீபகாலமாக பாலா மீது மக்களுக்கு மிகுந்த அக்கறையும் அவர் மீது ஒரு நல்ல பற்றும் ஏற்பட்டிருக்கிறது.

காரணம் அவர் உதவிகள் செய்து வருவதும் அவரின் பெருந்தன்மையான மனமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வருங்கால மனைவி குறித்து பாலா:

அண்மையில் தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் பல விஷயங்கள் குறித்து பேசினார் பாலா.

அப்போது எப்படிப்பட்ட பெண் அமைய வேண்டும் எப்படிப்பட்ட மணப்பெண்ணை நீங்க எதிர் பாக்குறீங்க என பாலாவிடம் கேட்டதற்கு, அவர் என்னுடைய பானையில் பதில் அளித்து எல்லோரையும் கலகலப்பாகவும் அதே நேரத்தில் சிந்திக்கும்படியாகவும் செய்திருக்கிறார்.

அவர் கூறிய பதிலை கேட்டு அனைவரும் உண்மையிலே பாலாவுக்கு கிடைக்கும் பெண் ரொம்ப லக்கி என கருத்துக்களை கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆம், சமீபத்தில் தன்னுடைய திருமணத்திற்கு எப்படியான பெண் வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் கூறியதாவது, எனக்கு மனைவியாக வர போகக்கூடிய பெண் எனக்கு காலையிலிருந்து காபி டீ போட்டு தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

என்னை நம்பினால் போதும் அவர்களுக்கு தேவையானதை செய்வதற்கு நான் போட ஆரம்பித்து விடுவேன்.

எனக்கு டிரஸ்ட்டை கொடுத்தால் அவர்களுக்கு நான் ரெஸ்ட்டை கொடுப்பேன் என கலகலப்பாக பேசி இருக்கிறார் கே பி ஒய் பாலா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version