வெளிநாட்டில் நடந்த அந்த சம்பவம்.. பிரமித்து போன KPY பாலா..!

திறமை இருப்பவர்களுக்கு விஜய் டிவியில் எப்போதும் வாய்ப்புகள் தேடி வந்து கொடுப்பார்கள் அந்த அளவுக்கு திறமை இருந்தால் மட்டும் போதும் தங்களது தொலைக்காட்சியில் நுழைந்துவிட்டால்,

அவர்களை வேற லெவலுக்கு நாங்கள் உயர்த்துவிடுவோம் என்பதில் விஜய் டிவி பல வருடங்களாக தனது தொழிலை செய்து வருகிறது .

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் தான் KPY பாலா.

வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பாலா:

அந்த நிகழ்ச்சியில் டைமிங் காமெடி செய்து கலகலப்பாக பேசி மிகப்பெரிய அளவில் பேமஸான பாலாவுக்கு KPY பாலா என்று தனது பெயர் அடையாளமாகிவிட்டது.

இதையும் படியுங்கள்: போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

அதன் பின்னர் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவ்வப்போது தென்பட்டு கலக்கலான காமெடிகள் செய்து நிகழ்ச்சிக்கு வரும் நடுவர்களை கலாய்த்து மாஸ் காட்டினார்.

அதன் மூலம் அவர் தொடர்ந்து பிரபலமாகி வந்தார். இப்படி கிடைக்கும் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி வந்த பாலாவுக்கு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் கிடைத்தது.

அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து இப்படி விஜய் டிவியில் தனது திறமையை வளர்த்துக் கொண்ட பாலா,

சென்னைக்கு வந்ததே அமுதவாணனின் உதவியுடன் தான். அவர் மூலம் விஜய் டிவியில் நுழையும் வாய்ப்பை பெற்றதாக பல பேட்டிகளில் கூட தெரிவித்திருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகள்:

திரைப்பட வாய்ப்புகள் தேடி வர தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தார். அந்த வகையில் விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து தும்பா, சிக்சர், புலிகுத்தி பாண்டி, லாபம், நட்பு , நாய் சேகர், கனம் , நாய் சேகர் ரிட்டன், ஆரம்பம், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் சின்ன சின்ன காமெடி கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!

தொலைக்காட்சி நிகழ்ச்சி எடுத்துக் கொண்டால் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆரம்பித்து சூப்பர் சிங்கர் கோமாளியுடன் சூப்பர் சிங்கர் , முரட்டு சிங்கிள், ராஜா கலக்கல் ராணி. ஊ சொல்றியா மாமா,

கலக்கப்போவது யாரு, சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று மிகப்பெரிய அளவில் காமெடி செய்து பெரும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டு இருந்தபோது ரித்திகாவிடம் அவர் காதல் வயப்பட்டு தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஆனால், அதை ஏற்றுக் கொள்ளவில்லை தொடர்ந்து மக்களுக்கு நல திட்ட உதவிகளும் , சராசரி மக்களுக்கு தேவையான தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் பாலா.

அதன் பின்னர் புயலால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக இறங்கி உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிநாட்டில் நடந்த தனது அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது. ஆறு மாதத்திற்கு முன்னர் நான் சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று இருந்தேன்.

அங்கு என்னை பார்த்த ஒருவர் ஒருவர் என் அருகில் வந்து நீங்க பாலா தானே என்று கேட்டார். கேட்டவுடன் ஆமாம் என்று நான் சொன்னதும் அப்படியா சரி சரி உட்காரு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

இதையும் படியுங்கள்: போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

பின்னர் போனவர் திரும்ப என்னிடம் வந்து அவரது மகளை என்னிடம் அறிமுகப்படுத்தி போட்டோ எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்.

மோதிரத்தை கழட்டிக்கொடுத்த முகம் தெரியாத நபர்:

உடனே அவர் கையில் போட்டிருந்த பெரிய அளவிலான மோதிரத்தை கழட்டி என்னிடம் கொடுத்து யாருக்கேனும் கொடுத்து விடுப்பா என்று சொன்னார்.

அதை பார்த்து நான் வியந்து போய்விட்டேன். நான் யாரிடமும் காசு பணம் இதெல்லாம் வாங்குவதில்லை என சொன்னதும்.. டேய் யார்கிட்டயாச்சும் கொண்டுபோய் கொடுடா என கூறிவிட்டு சென்றார் என பாலா,

பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியாக கூறினார். யாரிடம் கொடுத்தால் இல்லாதவரிடம் சேரும் என்று அவர் நன்கு அறிந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version