தமிழ் சினிமாவில் ஒரு நடிகை அதிக வரவேற்பு பெறுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான் என்று கூற வேண்டும். ஏனெனில் நடிகர்களுக்கு சம்பளம் அதிகமாக இருக்கிறது என்பதை தாண்டி அவர்களுக்கு என்று ஒரு ரசிக பட்டாளமே இருந்து வருகிறது.
நடிகர்களின் திரைப்படத்தை வெற்றி பெற செய்வதே இவர்களது வேலையாக இருந்துள்ளது. இதனால் தொடர்ந்து திரைப்படங்களில் பட வாய்ப்புகளையும் நடிகர்கள் பெற்று வருகின்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்த வரை அவர்களுக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளமோ ரசிகர் மன்றமோ கிடையாது.
அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட அதை கேட்பதற்கு ஆள் இல்லை எனும் பொழுது திரைத்துறையில் உள்ள முக்கியமான நபர்கள் நினைத்தாலே போதும் ஒரு நடிகையின் மார்க்கெட்டை இழக்க செய்து விடலாம்.
1970களில் பிரபலம்:
இப்படி எல்லாம் சினிமாவில் பிரச்சனைகள் இருந்து வந்த போதிலும் 1970களில் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களே சேர்ந்து நடிக்க ஆசைப்பட்ட ஒரு நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை கே.ஆர் விஜயா.
தன்னுடைய 15 வது வயதிலேயே கற்பகம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கே.ஆர் விஜயா. அப்போதைய காலகட்டங்களில் எல்லாம் சின்ன வயதிலேயே கதாநாயகியாக நடிக்க தொடங்கி விடுவார்கள்.
நடிகை ஜெயலலிதா கூட தன்னுடைய 15ஆவது வயதிலேயே திரை வாழ்க்கையை துவங்கியிருக்கிறார். இந்த நிலையில் கே.ஆர். விஜயாவின் வளர்ச்சி என்பது தமிழ் சினிமாவில் யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது என்று கூறலாம்.
கே.ஆர் விஜயா சம்பளம்:
எம்.ஜி.ஆர் சிவாஜி தமிழில் பிரபலமான நடிகர்களாக இருந்த சமகாலத்தில் வளர்ந்து வந்த கே.ஆர் விஜயா எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு நிகரான ஒரு சம்பளத்தை பெற்றார். மேலும் தமிழ் சினிமாவிலேயே ஒரு நடிகருக்கு நிகரான சம்பளம் பெற்ற முதல் நடிகை கே ஆர் விஜயா தான் என கூறப்படுகிறது.
அதேபோல் தமிழில் அம்மன் திரைப்படங்களில் நடித்து முதலில் துவக்கி வைத்தவர் நடிகை கே.ஆர் விஜயாதான் இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பழமொழிகளிலும் 600க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் கே.ஆர் விஜயா
மேலும் தமிழ் சினிமாவிலேயே தனக்கென பிரைவேட் ஜெட் வாங்கிய முதல் நடிகை என்றால் அதுவும் கே ஆர் விஜயா இப்படி பல பெருமைகளை பெற்ற ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் கே.ஆர் விஜயா.