2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை.
இவர் பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரம் ஏற்று இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.
சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை:
குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த தொடர் தான் மெட்டி ஒலி சீரியல் இந்த சீரியலில் நடித்த ஆரம்பித்த இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .
இவரது கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்து போக இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கினார்கள்.
குறிப்பாக இவருடைய அழகும், திமிரான நடிப்பும், அசத்தலான உயரம், வில்லத்தனமான பார்வை உள்ளிட்டவை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.
வில்லியாக நடித்த புகழ் பெற்றதால் தொடர்ந்து சீரியல்களின் வில்லியான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தது.
தனக்கு வில்லத்தனம் தான் செட் ஆகும் என்று சட்டென புரிந்துக் கொண்ட கிருத்திகா அதிரடி வில்லியாக மாறி தொடர்ச்சியாக மகா சீரியலில் வில்லியாகவே நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இவர் நடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
வில்லியாக மிரட்டிய கிருத்திகா:
அத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சின்னதம்பி சீரியலிலும் நடித்து அதகளம் செய்து விட்டார் கிருத்திகா அண்ணாமலை.
சீரியல்களின் முரட்டு வில்லியாக நடித்து வந்த கிருத்திகா நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார் என பொதுவெளியில் எங்கு சென்றாலும் மக்கள் அவரை விரோதி போல பார்க்க துவங்கினார்கள்.
இதனை அவரே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். நிஜத்தில் ரொம்ப சாதுவான கேரக்டர் கொண்ட கிருத்திகா எங்கும் பெரிசாக பேசவே மாட்டாராம்.
ரொம்ப சாஃப்ட் என கூறுகிறார்கள். சீரியலில் வருவதற்கு முன்னால் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி கவர்ச்சி ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தை ஈர்த்தார்.
சீரியல், நடனம் என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருந்த சமயத்தில் நடிகை கிருத்திகா அருண் சாய் என்பவரை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்துக்கு காரணம்:
இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒரு சில விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்து கொண்டு பிரபலமானார்கள்.
இதனிடையே சில வருடம் சீரியல்களில் தலை காட்டாமல் இருந்து வந்த கிருத்திகா பின்னர் மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கி தற்போது பிரபலமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று தனது கணவர் அருண் சாய் விவாகரத்து செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதாவது. சன் டிவி சீரியலில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 கிலோ எடையைக் கொண்டிருந்தேன்.
அந்த சீரியல் அக்கா கதாபாத்திரம் என்பதால் இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டார்கள்.
என்னுடைய கணவர் என்னுடைய உடலை பார்த்து எப்படி இருக்க பாரு என அடிக்கடி என்னுடைய உடலை வைத்து ரொம்ப சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்.
ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகிவிட்டது. இதனால் இருவருக்குள்ளும் செட்டாகாது எனக்கூறி பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்து விட்டோம் என கிருத்திகா கூறியிருக்கிறார்.
இதனை கேட்டதும் நெட்டிசன்ஸ், குண்டா இருக்குறதுக்காக விவாகரத்து பண்ணனும்னா வீட்டுக்கு ஒருத்தர் விவாகரத்து பண்ணிட்டு போக வேண்டியது தான் என விமர்சித்துள்ளனர்.