குழந்தை பிறந்து ரெண்டு மாசம் தான்.. கிருத்திகாவிடம் கணவன் செய்த “அந்த” கொடுமை.. என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் இணைய பக்கங்களிலும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் நிற்கிறார்.

லட்சக்கணக்கான ரசிகர்களை ஃபாலோவர்களாக கொண்டிருக்கும் நடிகை கிருத்திகா அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதை பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

இதனை கேட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பொதுவாகவே பிரபலங்களின் விவாகரத்து என்றால் உடனடியாக ரசிகர்களின் கவனத்திற்கு வந்து விடும். ஆனால், பிரபலமான நடிகையாக இருந்தும் இவருடைய விவாகரத்து குறித்து பெரிதாக எந்த தகவலும் வெளியே வரவில்லை.

இதற்கு என்ன காரணம்..? எதனால் விவாகரத்து ஏற்பட்டது..? என்ற விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

இவருடைய உண்மையான பெயர் உமா மகேஸ்வரி என்பதாகும். இவர் கணவனால் கொடுமைகளை அனுபவித்து விவாகரத்து வரை சென்ற அனைத்து விஷயங்களும் ஊடகங்களில் வந்திருக்கிறது.

ஆனால், கிருத்திகா அண்ணாமலை என்ற பெயரில் வரமால்.. உமா மகேஸ்வரி என்ற உணமையாக பெயரில் செய்திகள் வந்ததால் ரசிகர்களுக்கும்.. தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு கூட அது நான் தான்.. எனக்கு தான் இப்படியான கொடுமைகள் எல்லாம் நடந்திருக்கிறது என்று தெரியாமல் போய்விட்டது.

கணவரின் கொடுமையால் ஒரு முறை நான் தவறான முடிவு எடுத்து கொள்ள முயற்சி செய்தேன். அதனை இப்போது சொல்லலாமா வேண்டாமா என்று கூட தெரியவில்லை. குழந்தை பிறந்து இரண்டு மாதம் தான் இருக்கும்.. நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நோக்கில் தவறான முடிவை எடுத்தேன்.

அந்த நேரத்தில் ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியானது. ஆனால், நடிகை உமா மகேஸ்வரி என்ற பெயரில் செய்திகள் வெளிவந்த காரணத்தினால் யாருக்கும் இந்த விஷயம் தெரியாமல் போய்விட்டது என கூறியிருந்தார்.

சரி, உமா மகேஸ்வரி என்ற பெயரில் இவருக்கு ஏன் விவாகரத்து நேர்ந்தது ஏன் தவறான முடிவுக்கு தள்ளப்பட்டார் என்று தேடினால்.. அதிரவைக்கும் உண்மைகள் வெளிப்படுகின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்த நிலையில் அவருடைய கணவர் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால், குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் நான் என்னுடைய தாய் வீட்டிலேயே மேலும் சில மாதங்கள் தங்கி விட்டு வருவதாக கணவரிடம் அனுமதி கேட்டிருக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

அதனை தொடர்ந்து அவருடைய தாய் வீட்டிலேயே இருந்திருக்கிறார். ஒருநாள் திடீரென அவருடைய கணவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. நான் விபத்து ஒன்றில் சிக்கி விட்டேன். பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார் கணவர்.

பதறிப்போன கிருத்திகா அண்ணாமலை உடனடியாக தன்னுடைய கணவர் வீட்டிற்கு கை குழந்தையுடன் சென்று இருக்கிறார். ஆனால், சென்ற இடத்தில் அவருடைய கணவர் குத்துக் கல்லு போல எந்த ஒரு காயமும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

அதிர்ச்சி அடைந்த கிருத்திகா அண்ணாமலை எதற்காக இப்படி பொய் சொல்லி என்னை வர வைத்தீர்கள்,,? என கேட்டிருக்கிறார். அங்கே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மட்டுமல்லாமல் கிருத்திகா அண்ணாமலையிடம் வரதட்சணை கேட்டு மோசமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள் கிருத்திகா அண்ணாமலை கணவர் வீட்டார்.

இதனால் மணமடைந்து போன கிருத்திகா அண்ணாமலை தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நோக்கில் தவறான முடிவு எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றி அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரம் தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்திருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை.

இப்படி ஒரு விஷயத்தை ஒரு சீரியல் நடிகை அனுபவித்திருக்கிறார். ஆனால் இந்த அனைத்து விஷயமும் வெளியே தெரியாமல் போனதற்கு காரணம் தன்னுடைய உண்மையான பெயரான உமா மகேஸ்வரி என்ற பெயரில் செய்திகள் வெளியானது தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

இவருடைய இந்த கொடுமைகளை அறிந்த ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து தான் போயிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version