குழந்தை பிறந்து ரெண்டு மாசத்துலையே மீண்டும் அந்த விஷயத்திற்கு கொடுமை.. விவாகரத்து குறித்து சீரியல் நடிகை வேதனை..!

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பல்வேறு வெற்றி தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் கிருத்திகா அண்ணாமலை.

நல்ல உயரமான மற்றும் ஒல்லியான தோற்றுத்துடன் இருந்த இவர் குறிப்பாக வில்லி கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

வில்லி நடிகை கிருத்திகா:

பலவேறு தொடர்களில் வில்லியாகவே நடித்திருக்கிறார். கிருத்திகா அண்ணாமலை என்று கூறுவதை விட “மெட்டி ஒலி கிருத்திகா” என்று சொன்னவுடன் எல்லோருக்கும் டக்கென ஞாபகத்திற்கு வந்துவிடுவார்.

அந்த அளவுக்கு மெட்டி ஒலி சீரியலில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடத்தை இன்றளவும் பிடித்து வைத்திருக்கிறார் கிருத்திகா.

நாயகியாக வேண்டும் என்ற ஒரு ஆசையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் கிருத்திகா.

கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று மிரட்டலான வில்லி ரோலில் நடித்து சின்ன திரையில். ஒரு காலத்தில் ஜொலித்து வந்தார் கிருத்திகா.

மிரட்டலான வில்லியாக மெட்டி ஒலி கிருத்திகா:

அந்த சமயங்களில் கொஞ்சம் கூட கேப் இல்லாத அளவுக்கு அடுத்தடுத்து சீரியல்களில் படு பிஸியாக நடித்து வந்த கிருத்திகா அண்ணாமலைக்கு பின்னர் காலங்கள் செல்ல வட வாய்ப்புகளை இல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலமாக தன்னுடைய நடிப்பை ஆரம்பித்த இவர் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் திமிரான நடிப்பை வெளிப்படுத்தி உச்சத்தை தொட்டார்.

அதுவே அவரின் பிளஸ் பாயிண்ட் ஆகவும் பார்க்கப்பட்டது. இதை சரியாக புரிந்து கொண்ட கிருத்திகா தனக்கு வில்லத்தனமான கேரக்டர் தான் பக்காவாக செட்டாகிறது மக்களும் அதை விரும்பி பார்க்கிறார்கள் என தெரிந்து கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடி வில்லியாகவே மாறினார்.

முந்தானை முடிச்சு, செல்லமே ,வம்சம், கேளடி கண்மணி போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான வில்லி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலிலும் நடித்து அதகளம் செய்துவிட்டார்.

நிஜத்தில் ரொம்ப அமைதியானவர்:

தொடர்ச்சியாக அடுத்த அடுத்த சீரியல்களில் வில்லியாகவே பார்த்து வந்த ரசிகர்கள் கிருத்திகா நிஜத்திலே உண்மையில் அப்படித்தான் போல நினைத்து விட்டார்கள் .

ஆனால், உண்மையில் கிருத்திகா மிகவும் பவ்யமான சாந்தமான குணம் கொண்டவராம். இந்நிலையில் கிருத்திகா அண்ணாமலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதை சூசகமாக பதிவு செய்திருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, திருமணம் முடிந்து சில மாதங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்தது .

இதற்கு முக்கிய காரணமாக நான் பார்ப்பது நான் தொடர்ந்து சீரியலில் நடித்தேன் எனக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது .

குழந்தை பிறந்த இரண்டு மாதத்திலே தற்கொலை முயற்சி:

ஆனால், என்னுடைய கணவருக்கு சொல்லிக் கொள்ளும்படி வருமானம் இல்லை. நான் தான் ஒட்டு மொத்த குடும்பத்தின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நபராக இருந்தேன்.

இதனால் அவருக்கு அவர் மீது தாழ்வு மனப்பான்மை வந்தது. இதுதான் எங்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

குழந்தை பிறந்து இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தோம். ஆனால், குழந்தை பிறந்து இரண்டு மாதம் தான் ஆகியிருக்கும் மீண்டும் இந்த பிரச்சனை அரங்கேறியது .

குழந்தை பிறந்த ஒரு நான்கு மாதத்தில் நான் தவறான முடிவு எடுத்துக் கொள்வதற்கு முயற்சி செய்தேன்.

அதை எல்லாம் தாண்டி தற்போது விவாகரத்து செய்துவிட்டு என்னுடைய மகள்களுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என பேசி இருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version