Baekelmans Sahana : நேற்று மதியம் நடிகரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பன் வெளிநாட்டு பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
இது சார்ந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன கால்பந்து பயிற்சி என்று வெளிநாட்டுக்கு சென்ற இவர் அங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது போன்ற பதிவுகளை பார்க்க முடிந்தது.
இதை விவகாரம் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இன்பனின் தாயுமான கிருத்திகா உதயநிதி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, காதலிக்கவோ அல்லது காதலை வெளிப்படுத்தவோ பயப்பட வேண்டாம்.. இது இயற்கையின் மகிமையை புரிந்து கொள்ளும் வழிகளில் ஒன்று என்ற ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இவருடைய இந்த கருத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் இன்ப நிதியின் தனிப்பட்ட வாழ்க்கையோ அல்லது அது சார்ந்த புகைப்படங்கள் இவற்றை வைத்து அவரை விமர்சனம் செய்வது நாகரீகம் கிடையாது.
ஒவ்வொருவருடைய தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும் என்றும் ஒருவேளை நீங்கள் உங்கள் காதலியுடன் இருக்கும் புகைப்படம் இப்படி வெளியாகி இருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றும் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் இணையவாசிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கிருத்திகா உதயநிதியின் அனுபவ முதிர்ச்சி இதில் பார்க்கமுடிகிறது. இது மிகச்சிறந்த அணுகுமுறையாகவே பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள்.
மேலும், தன்னுடைய மகனின் லீக்கான புகைப்படங்களை குறிப்பிட்டு சூசகமாக இவர் இப்படியான பதிவை வெளியிட்டு இருக்கிறார் என்று இணையவாசிகள் பலரும் கூறி வருகிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இன்பன் நிதியுடன் இருக்கும் அவருடைய தோழி Baekelmans Sahana-வின் புகைப்படத்தை எடுத்து வருங்கால கழக தலைவியே.. சின்ன அண்ணியாரே.. என்று கலாய் மீன்களை பறக்கவிட்டு வரும் நெட்டிசன்களும் இருக்கவே செய்கிறார்கள்.