பிரபல இளம் நடிகை கீர்த்தி செட்டி சமீபத்தில் விளம்பர படம் ஒன்று நடித்திருக்கிறார். OZIVA என்ற நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தமாக இருக்கும் கீர்த்தி செட்டி உடலோடு ஒட்டிய உடையில் யோகா செய்வது மற்றும் ட்ரெட்மில்லில் ஓடுவது என இருக்கும் இந்த விளம்பர வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல தெலுங்கு நடிகையான கீர்த்தி செட்டி தற்பொழு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகக்கூடிய இந்த திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும் படத்தின் ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை கீர்த்தி செட்டி. இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி ஒப்பந்தமாக இருக்கிறார்.
இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் வெண்ணிலா கபடி குழு கிஷோர், பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிகருக்கின்றனர்.
தன்னுடைய முதல் தமிழ் திரைப்படம் என்பதால் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார் நடிகை கீர்த்தி செட்டி. இது ஒரு பக்கம் இருக்க பிரபல நிறுவனமான OZIVA என்ற நிறுவனத்திற்கு விளம்பரத்துவதாக ஒப்பந்தமாக இருக்கும் நடிகை கீர்த்தி செட்டி.
அந்த விளம்பர படங்களில் நடிக்கும் பணியை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் உடல் வாகை கண்டு வாயை பிளந்து வருகின்றனர்.
மேலும் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.