வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
தற்போது தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி இருந்தால் நடிகை கீர்த்தி ஷெட்டி இந்த திரைப்படத்திற்கு வணங்கான் என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் இந்த படத்தை ட்ராப் செய்து விட்டது. ஆனால், ஏற்கனவே மறைமுகமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து விட்டார் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான தி வாரியர் என்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகம் பெற்றிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.
குறிப்பிடும்படியாக இந்த படத்தில் இடம்பெற்ற புல்லட்டு என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைய செய்தது. இந்த படத்தில் இடம் பெற்ற நடிகர் சிலம்பரசன் பாடிய புல்லட்டு என்ற திரைப்பட பாடல் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது.
இந்த படத்தில் ஆட்டம் போட்டிருந்த கீர்த்தி ஷெட்டியின் அழகை பார்த்து அசந்து தான் தான் போனார்கள் ரசிகர்கள். தொடர்ந்து தன்னுடைய படைப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் ஏராளமான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.