இந்த இரண்டு பெண்களுடன் சரத்குமார் ரகசிய தொடர்பு.. போட்டு உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக 90ஸ் காலகட்டத்தில் இருந்து வந்தவர் தான் கே எஸ் ரவிக்குமார்.

அவரது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படமாகும் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் சாதனை படைத்த படமாகவும் பார்க்கப்பட்டு வரும்.

இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார்:

அந்த வகையில் சரத்குமாரை வைத்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். குறிப்பாக சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை, சமுத்திரம், பாறை, ஜக்குபாய் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை சரத்குமார் வைத்து இயக்கி வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை குறித்து கலகலப்பாக பேசினார்கள்.

அப்போது சரத்குமாரின் சிறுவயதில் இருந்த ரகசிய உறவு பற்றி கே எஸ் சுகுமார் உண்மையை உடைத்திருக்கிறார்.

அதாவது நான் ஒரு முறை சரத்குமாரின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த ஷூட்டிங் பார்க்க என்னுடைய நண்பன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று கேட்டார்.

ஸ்கூல் படிக்கும்போதே சரத்குமார் இரண்டு பெண்களை:

அதற்கு நான் உடனே இவர் ஒரு ஹீரோ. சேரன் பாண்டியன் படத்தை இவரை வைத்து தான் நான் இயக்கினேன் என கூறினேன்.

உடனே என் நண்பன்…அட… அது இல்லடா! நம்ம ஸ்கூல் படிக்கும்போது இவர் பெசன்ட் நகர்ல ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டு இருப்பாரு ஞாபகம் இருக்கா? என கேட்டவுடன் ஆமாம் என நினைவுப்படுத்தி உடனே சரத்குமாரிடம் சென்று கேட்டேன்.

சார் நீங்க பெசன்ட் நகரில் ஒரு பெண்ணோடு எந்த நேரமும் இருப்பீங்க நியாபகம் இருக்கா? அந்த பெண்ணின் வீட்டு மாடியில் தான் நீங்க வாடகைக்கு இருந்தீங்க.

அப்போது அந்த பெண்களை நீங்கள் தான் ஸ்கூல் பஸ்ஸில் ஏத்தி விடுவீங்க… கூட்டிட்டு போவீங்க என்று கேட்டேன்…. உடனே … ஆமாம் ஞாபகம் இருக்கு என்றார்.

அந்த பெண்களை நீங்கள் அழைத்துக் கொண்டு போகும் போது ஒரு ஐந்து பசங்க கூட்டமாக வருவாங்க ஞாபகம் இருக்கா? என்று கேட்டேன்.

அதற்கு உடனே ஆமாம் என்று சொன்னார். அந்த கூட்டத்தில் இருந்த ஐந்து பசங்களில் ஒருவர்தான் என் நண்பர் என் நண்பர்தான் அந்தப் பெண்ணை காதலிப்பதாக சுற்றி திரிந்தார்.

உடனே அந்த பொண்ணு வீட்டில் சொல்ல அவளுக்கு பாதுக்காப்பாக உங்களை அனுப்பி வச்சாங்க. எங்களிடம் இருந்து அந்த பெண்ணைபாதுகாக்க தான் உங்களுடைய ஹவுஸ் ஓனர் உங்களை நம்பிக்கையோடு அனுப்பினார்.

பலவருட ரகசியத்தை உடைத்த கே. எஸ் ரவிக்குமார்:

ஆரம்பத்தில் அந்த பெண்ணுடன் நாங்கள் உன்னை உங்களை பார்த்ததும்… ஓரிரு நாளில் போய் விடுவார் என நினைத்தோம் .

ஆனால், நீங்கள் தொடர்ந்து வந்ததால் எப்படியாவது உங்களுடன் ஃபிரண்ட் ஆகிக்கொள்ள வேண்டும் என நினைத்துதான் உங்களுக்கு வணக்கங்கள் அங்கிள் என்று சொல்லிவிட்டு நாங்கள் போவோம் என பழைய நினைவுகள் பகிர்ந்தார் கே எஸ் ரவிக்குமார்.

என்னது கே எஸ் ரவிக்குமார் சார் ஸ்கூல் படிக்கும்போது சரத்குமார் அங்கிள் வயதில் இருந்தாரா? என்று ரசிகர்கள் இதை கேட்டதும் வியப்படைந்து போக….

ஆமாங்க அப்பவே அப்பவே சரத்குமார் பாடி பில்டர் போல் நல்ல ஜிம் பாடி வைத்துக்கொண்டு கட்டுமஸ்தான தோற்றத்தில் இருப்பார். நாங்கள் எல்லாம் சின்ன பசங்க என்று கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version